Sunday, January 30, 2011

காட்சியில் எனது கவிதைத் தொடர்

இந்தவாரம் முதல் காட்சி இணைய வலைப் பூவில் எனது கவிதைகள் தொடராக வெளிவருகிறது. இயக்குனர் ராம், சக படைப்பாளி அவனி அரவிந்தன், மற்றும் காட்சி குழுவினருக்கு நன்றிகள். இந்த வார கவிதைகள்.


1.மறந்துவிட்ட பொம்மைகள்.

கண்களில் மைதீட்டி
கன்னங்களில் பௌடரிட்டு
உதடுகளில் சாயம்பூசி
கவர்ச்சி உடையணிந்து
வண்ண வண்ண மலர்கள் சூட்டி
அழகாய்த்தான் அனுப்பிவைத்தாய்
ஒரு துரோகத்தை.

சுகித்துப் பழுத்த நான்
ஒப்பனை கலைத்து
ஒவ்வொரு ஆடையும் களைந்து
நிர்வாணப் படுத்தியதில்
குழந்தையாகிவிட்ட உன் துரோகத்துடன்
கொஞ்சி விளையாடுகிறேன்.

மறந்துவிட்ட பொம்மைகளென
மரித்துக் கிடக்கின்றன தரையில்
வெறுப்பும் தண்டனையும்.

2.நான் சூன்யம்


கல்லெறியக் கலங்கி
கலைந்து அலையலையாய்
நெளிந்து பரவியபின்
தெளிந்த ஆழ்மௌன மோனத்தில்
தலைக்குப்பின் வந்த ஒளிவட்டச் சூரியனுடன்
குளக்கரை புத்தனானேன்
அந்தி சாய்ந்து சற்றே இருட்ட
வந்த பிறைநிலவு சூடி
சிவனானேன் குளத்து நீரில்
சுத்தமாய் இருட்டிவிட
நான் சூன்யம்.



16 comments:

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

மிகவும் அருமை. மிக ரசித்தேன். வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com said...

முத்தான கவிதைகள்.
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்.

rvelkannan said...

சூனியத்திலிருந்து எல்லாம் என்பார்கள். அப்படியாக தான் தெரிகிறது உங்களின் கவிதைகள் எனக்கு. உங்களின் நட்பு கிடைத்ததில் பெருமை கொள்கிறேன். . காட்சியில் வந்தமைக்கும் வரப்போவதறக்கும்
சேர்த்து வாழ்த்துகள் கோநா.

கோநா said...

நன்றி கனாக் காதலன்

கோநா said...

தொடர் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றிகள் ரமணி.

கோநா said...

வாங்க வேல் கண்ணன், மனந் திறந்த வாழ்த்துக்கும், நேசக் கரத்துக்கும் மிக்க நன்றிகள்.

"உழவன்" "Uzhavan" said...

அருமையான கவிதைகள்.. காட்சியில் வெளிவருவதற்கு வாழ்த்துகள்

ஹேமா said...

வாழ்த்துகள் கோநா.

இரண்டு கவிதைகளுமே பொருள் தேட வைத்தாலும் சூன்யம் அருமை !

Unknown said...

wow....beautiful!

கோநா said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி உழவன்

கோநா said...

தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஹேமா.

கோநா said...

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி kasthurirajam.

பா.ராஜாராம் said...

கொஞ்சம் வேலைப் பளுக்கள். முன்பே வாசித்து விட்டேன். பின்னூட்ட இயலவில்லை.

வாழ்த்துகள் கோநா! தொடர்ந்து கலக்குங்க. (காட்சியில் கூட வாசித்தேன்)

கோநா said...

வாங்க பா.ரா. அப்பாடா...உங்க ஆசீர்வாதத்த வாங்கியாச்சு, இப்பத்தான் நிம்மதியா இருக்கு.அப்பப்ப இந்தமாதிரி நீங்க சொன்னா மக்கா நாங்க கலக்குறத கொஞ்சம் நல்லாக் கலக்குவோம்.மிக்க நன்றி பா.ரா.

சக்தி கல்வி மையம் said...

கவிதைகள்அருமை.
தொடர்ந்து வருகிறோம்.

கோநா said...

நன்றி கருண்.