Wednesday, January 19, 2011

ஒரு ஏரி, நிறைய நீர், நிறைய பறவைகள்...

எங்கள் ஊரில்
ஒரு ஏரி இருந்தது
நிறைய நீரும்,
பறவைகளும் கூட.

நீரை பாட்டில்களிலும்
ஏரியை பிளாட்களிலும்
அடைத்து வித்துவிட்டார்கள்.

இப்போது
எங்கள் ஊரில்
நிறைய வீடுகளும்
வீடுகளுக்குள்  சொந்தமாக
ஆளுக்குக் கொஞ்சம்
பாட்டில் நீரும், ஏரியும்...

பறவைகள்தான்
எவ்வளவு சொல்லியும் கேட்காமல்
எங்கோ பறந்து போய்விட்டன
எங்களை நிராகரித்துவிட்டு. 

24 comments:

pichaikaaran said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

அதற்கு தான் வாங்கி வைத்திருக்கிறோம் கூண்டுகளை. அருமையான கவிதை. வாழ்த்துக்கள் .

கோநா said...

தொடர்ந்த வாசிப்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி பார்வையாளன்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. நல்ல கவிதை.

கோநா said...

மறு வருகைக்கும் பெரு ஊக்க வாழ்த்துக்கும் மிக்க நன்றி கனாக்காதலன்.

svramani08 said...

சமீபத்தில் படித்த மிகச் சிறந்த கவிதைகளில்
இதுவும் ஒன்று.வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லாருக்குங்க

கோநா said...

தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி svramani08,

கோநா said...

தங்களின் மனந்திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி

கோநா said...

தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி t.v ராதாகிருஷ்ணன்.

கோநா said...

thanks for ur first visit and comment ramasaamy..

விஜய் said...

தனி உலகம் தேடும் நிராகரிக்கப்பட்ட பறவைகள்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கோநா said...

@vijay
varukaikkum, vaalththukkum mikka nanri nanpaa.

கோநா said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கௌரி

Anonymous said...

உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துகள்

கோநா said...

muthal varukaikkum valththukkum mikka nanri punitha.

goma said...

பறவைகளுக்குத் தெரியும் இனியும் இங்கிருந்தால் பறப்பதற்க்குச் சிறகு கூட இல்லாமல் பிடுங்கப் படுவோம் என்பது...

கோநா said...

goma,அதைவிடக் கொடுமை பறவைகளுக்கு சிறகுகளுடன் கூண்டில் அடைபட்டுக் கிடப்பது, வருகைக்கு மிக்க நன்றி.

ஹேமா said...

நிறைவான நிறையக் கவிதைகள் வாசித்தேன் கோநா.வாழ்த்துகள். மீண்டும் வருவேன் !

கோநா said...

தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றிகள் ஹேமா. நல்வரவு.

மைதீன் said...

அற்புதமாக இருந்தது. வாழ்த்துக்கள்.ரொம்பவும் ரசித்தேன்

கோநா said...

நன்றி maidheen.

இராஜராஜேஸ்வரி said...

பறவைகள்தான்
எவ்வளவு சொல்லியும் கேட்காமல்
எங்கோ பறந்து போய்விட்டன
எங்களை நிராகரித்துவிட்டு.

நிராகரிப்பின் நிதர்சனமான
வேதனை வரிகள்..

Anonymous said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு