Tuesday, January 25, 2011

காந்தியின் சிரிப்பும் அதற்கான காரணங்களும்.

காலையில்
வெளியில் செல்கையில்
சாலையில்
வழியில் கிடந்தது
நான்காய் மடிக்கப்பட்ட
ருபாய் நோட்டொன்று

விட்டுச் செல்வதைப் பற்றியோ
எடுத்துக் கொள்வதைப் பற்றியோ
சற்றும் எண்ணவில்லை
சட்டென எடுத்துக் கொண்டேன்
யாரும் கவனிக்கிறார்களா என
கவனித்தபடி

என்னுடைய அதிர்ஷ்டமென
மனது
மார்தட்டிக் கொள்ளும்போதே
இன்னொருவன் அவஸ்தையென
தலையில் குட்டுகிறது
மனசாட்சி

எவருடைய அவசியமோ
எதற்கான சேமிப்போ
என்ன கனவோ
ஏதேனும் இருக்கக் கூடும்
உறுதியாய்

எடுத்த இடத்தில்
எவருடையதென்றால்
எல்லாக் கரங்களும்
எட்டி ஏந்தக் கூடும்
என்னுடையதென
மகாலட்சுமியை
மறுப்பதில்லை எவரும்

விசாரித்துச் சென்று தர
எந்தப் பணத்தின் மீதும்
குறிப்புகள் இருப்பதில்லை
நியாயமாய் அது
யாருக்குச் சொந்தமென

கிடைத்த இடத்திலேயே
கிடக்க விட்டுவிட்டால்
தொலைத்தவர்
தேடி வருவதற்குள்
கிடைத்தவர்
எடுத்துக்கொள்வர்
என்போலவே

எல்லாவற்றுக்கும் மேலாக
கண்டெடுத்த என்
கஷ்டங்களுக்கான
கடவுளின் பரிசாகவோ
தவறவிட்டவன் செய்த
தவறுகளுக்கான
தண்டனையாகவோ
இருக்கவும் கூடும்

தலை நிமிர்ந்து
கடை நுழைகையில்
கண்டெடுத்த பணம் வைத்த
கால்சட்டைப் பையிலிருந்து
ஒலியற்று நிறைந்து வழிகிறது
கரன்சிகளிலிருக்கும்
காந்தியின் சிரிப்பும்
அதற்கான காரணங்களும்.

-நன்றி திண்ணை வார இணைய இதழ்.
  

23 comments:

சக்தி கல்வி மையம் said...

Me the first,
see,


http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_25.html

ராமலக்ஷ்மி said...

நன்றாக உள்ளது காந்தியின் சிரிப்புக்கான காரணங்களும், நோட்டைக் கண்டு எடுத்தவனின் நியாயங்களும்.

கோநா said...

வாங்க ராமலக்ஷ்மி, நன்றிகள்.

கோநா said...

ஆமாங்க நீங்கதான் மொதல்ல, பாத்துட்டங்க sakthistudycentre. நன்றிகள்.

Yaathoramani.blogspot.com said...

.தலை நிமிர்ந்து கடை நுழைந்துதுதான்.
காந்தியின் சிரிப்புக்கு காரணமோ ?
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

கோநா said...

வாங்க ramani, தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்

க ரா said...

arumaiyana padaipu..

கோநா said...

வாங்க இராமசாமி, நன்றிகள்.

கோநா said...

thank u kanakkathalan.

சிவகுமாரன் said...

சத்திய சோதனை தான் உங்களுக்கு போங்க.
கவிதை அருமை.

கோநா said...

maruvarukaikku nanri siva.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

யதார்த்தமான கவிதை..

காந்தி நோட்டை எடுத்தவர் தரப்பு நியாயமும்... கோட்டை விட்டவர் தரப்பு வாய்ப்புகளும்.. அழகா சொல்லிருக்கீங்க..!

எல்லாமுமே அருமை.. இருந்தாலும்..எனக்கு இந்த வரிகள்...
//கிடைத்த இடத்திலேயே
கிடக்க விட்டுவிட்டால்
தொலைத்தவர்
தேடி வருவதற்குள்
கிடைத்தவர்
எடுத்துக்கொள்வர்
என்போலவே//

ரொம்ப பிடிச்சிருக்கு.. சத்தியமான உண்மை.. :-)

goma said...

காந்தியை மனசாட்சியாக்கி விட்டீர்...அருமை ...
கரன்சியில் காந்தி ,அவர் சிரிப்பு சட்டைப்பையில்
சூப்பர்

கோநா said...

ஆனந்தி, தங்களின், வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்

கோநா said...

வாங்க goma . தொடர் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.

Philosophy Prabhakaran said...

இதுக்கெல்லாம் நம்ம எதுவும் செய்ய முடியாது பாஸ்... நடந்தது நடந்து போச்சு... லூசுல விடுங்க...

கோநா said...

thank u praba.

Unknown said...

வருகை தாருங்கள்...!
வாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!

என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"

கோநா said...

thank u nanthalaalaa.

ஹேமா said...

சத்திய சோதனையா.காந்தியின் சிரிப்பை இன்னும் கவனமாகப் பார்க்கிறேன் கோநா !

கோநா said...

nanri hema.

மதுரை சரவணன் said...

அருமை...வாழ்த்துக்கள் . கண்டெடுத்த பணம் சொல்லும் ஒழுக்கம் காந்தியுடன் சேர்ந்து சிரிக்கிறது..வாழ்த்துக்கள்

கோநா said...

நன்றி சரவணன்.