வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு
நிலவு கண்ணில் படவில்லை
எழுந்து தேடவுமில்லை.
அருகருகே
அம்மா, குழந்தை.
நீண்ட ஒற்றைக்கொம்புடன்
மூன்று கால் மான்,
தும்பிக்கை உயர்த்தியபடி
வலது காலும்
வாலுமற்ற யானை,
அங்கங்கே விரிசலுற்ற
குதிரைகளற்ற தேர்,
களைந்தெறிந்த
குழந்தை உடைகளாய்,
உடைத்த பொம்மைகளாய்
இன்னுஞ் சில
உருவமற்ற குவியல்கள்.
"விர்ர்"ரென்று
விமானமொன்று
அருகில் கடக்க
விருக்கென்று துள்ளிய குழந்தை
தவழ்ந்து செல்கிறது
தாயிடம்.
குளிர்ந்து கனத்த
காற்றொன்றில் கலைந்து
பாம்பாய், புலியாய்,
கரடியாய், யானையாய்,
உருவங்களற்றதுமாய்,
உடைந்து
உருமாறியது அம்மா.
அரவணைத்துக்காக்க அருகே
அம்மா இல்லாதலால்
அனைத்துமே பயமுறுத்த,
முகங்கருத்துக் குழந்தை
பயந்து அழ,
ஆரம்பித்திருக்கிறது
ஒரு குழந்தை மழை.
-நன்றி திண்ணை வார இணைய இதழ்.
-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ்
26 comments:
ரொம்ப அழகான மழை கண் முன் பெய்து ஓய்ந்தது :)
கோநா...ஒரு குட்டிக் குழந்தையைப் பயமுறுத்த இத்தனை பேரா.பாவம்ல.
குழந்தைகளின் கனவுகளில் கடவுளும் தேவதைகளும்தான் வருமாம்.
பெரியவர்கள் சொல்வார்கள்.
குழந்தைமழை பயங்கரம் !
பொழிந்திருக்கும் ‘மழை’ அழகு. அருமை.
மிக அற்புதமான கற்பனை !
நல்ல கவிதை..
ஒரு குழந்தை மழை.
//
அழகாய் இருக்கிறது.
தொடர் வருகைக்கு மிக்க நன்றி புனிதா.
ஹேமாவுக்கு நன்றிகள்.
தொடர் வருகைக்கு நன்றிகள் ராமலக்ஷ்மி.
நன்றிகள் கனாக்காதலன்.
மறு வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி samudra.
முத்துலெட்சுமி தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.
மிக அற்புதம்.. கோநா..
வாங்க, தேனம்மை, மிக்க நன்றி.
அருமை
நன்றி கௌரி.
காட்சிகள் விரிந்து கனமழை கவிதையாய் பொழிகிறது
வாழ்த்துக்கள் நண்பா
விஜய்
arumaiya irukunga...
விஜய், தொடர் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றிகள்..
வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் இராமசாமி.
நேற்றே வாசித்தேன் கோநா...
ரொம்ப பிடிச்சிருந்தது.. வாழ்த்துகள்!
உங்கள் மின் முகவரி அனுப்ப இயலுமா?
rajaram.b.krishnan@gmail.com
மிக்க நன்றிகள் பா.ரா. தங்களுக்கு தனி மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். மீண்டும் நன்றிகள்.
கோநா திண்ணையில் வாசித்தேன்
மழையும் மேகமும் அதன் உருவமும் உவமைகளை தூறலாய் தெளித்து விட்டீர்கள்.
பாராட்டுகிறேன்
வாங்க goma . மனந் திறந்த பாராட்டுகளுக்கு மிக்க நன்றி
உங்களின் கவிதைகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது.இதோ 'ஒரு குழந்தை மழை'போல!
priya, mannikkavum kalam thaalntha nanrikal.
Post a Comment