Friday, January 14, 2011

வீடெனப்படுவது...

இந்த வார ஆனந்த விகடனில் வெளியான எனது கவிதை

அதிகாலை ஊரிலிருந்து
தவிர்க்க முடியாத தகவலொன்று
கைப்பேசி சொல்லப்பட
ஆற அமர யோசித்து
பொருத்தமான பொய்யொன்றை
ஆபீசில் சொல்லிவிட்டு
அவசியம் வருமாறு
அவசரமாய் கிளம்பிவிட்டனர்
அப்பா, அம்மா, தங்கை.

எனக்கும் சேர்த்து எடுத்துச் சென்ற
ஆறேழு நாட்களுக்குமான
ஆடைகள், இதர பொருட்களுடன்
ஒட்டிக்கொண்டு
வீடும் சென்றுவிட
என்னுடன் மிச்சமிருப்பவை
சில சுவர்கள், பொருட்கள்,
சில ஜன்னல்கள், கதவுகள்,
ப்ரிஜ்ஜில் மிஞ்சிய  நேற்றைய மாவு,
இவற்றுடன்
ஹாலில்  அமர்ந்து
தம் அடிக்க கொஞ்சம் சுதந்திரமும்,
நிறைய தனிமையும்.

-நன்றி 19-01-11 ஆனந்த விகடன் வார இதழ். 

-நன்றி பதிவுகள் இணைய இதழ் 

33 comments:

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்...

உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

கோநா said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் sakthistudycentre-karun

svramani08 said...

"நிறையத் தனிமை" யில்
ஒரு படைப்பாளிக்குரிய
எதிர்பார்ப்பும் சுகமும் தெரிகிறது

விஜய் said...

விகட வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

அன்புடன் நான் said...

கவிதை மிக யதார்த்தம்.... பாராட்டுக்கள்.

உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

இன்று நாட்டிலிருந்து தோழி ப்ரபா போன் பண்ணியிருந்தாள், "விகடனில் உன் கவிதை வந்திருக்குடா. அப்புறம் மக்கா கோநா என்பவர் உன் 'சினேகிதணும் சில மழை நாட்களும்' பதிவிற்கு பின்னூட்டம் இட்டுருக்கிறார். அவரின் கவிதையும் கூட வந்திருக்கு. வாசித்து பார் அருமையாய் இருக்கு" என்றாள்.

அருமையாய் இருக்கு மக்கா! வாழ்த்துகள்!

கோநா said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி பா.ரா. உங்கள் தோழி பிரபாவுக்கும் எனது நன்றிகள். நான் மிகவும் மதிக்கும் உங்களின் வருகையும் வாழ்த்தும் மிகவும் உற்சாகம் அளிக்கிறது. மறுபடியும் இருவருக்கும் எனது நன்றிகள்.

கோநா said...

அரசு அவர்களுக்கு,தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். தங்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும் எனது பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

கோநா said...

@ விஜய்,
தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பா

கோநா said...

வருகைக்கும்,வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் svramani08

குட்டிப்பையா|Kutipaiya said...

வாழ்த்துக்கள் கோநா! பொங்கல் பரிசா :)

கோநா said...

nanri kuttipaiya...

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

நல்லாருக்கு கோநா. வாழ்த்துக்கள்.

கோநா said...

thankal muthal varukaikkum, valththukkum mikka nanri kanaak kathalan.

சமுத்ரா said...

வாழ்த்துக்கள்

கோநா said...

nanri samudra

எல் கே said...

உங்களை வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_19.html

ராமலக்ஷ்மி said...

வலைச்சரம் வழியே வந்தேன். மிக அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!

கோநா said...

thankal varukaikkum, yennai valaich saraththil arimukap paduththiyathrkkum mikka nanri L.K.

கோநா said...

thankalin muthal varukaikkum, valththukkum mikka nanri ramalakshmi.

மங்குனி அமைச்சர் said...

கவிதை நல்லா இருக்கு ..............
விகடனில் பிரசுக்க மானதர்க்கு வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

விகடனில் பார்த்த ஞாபகம் உள்ளது. (பாரா பெயர் பார்த்தேன். தெரிந்த பெயர் என்று படித்தேன்.) பாராட்டுக்கள். நல்லாயிருக்கு கவிதை. வலைச்சரத்தில் எல்கே சுட்டி வந்தேன்.

கோநா said...

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம், LK அவர்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

கோநா said...

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் மங்குனி அமைச்சரே.

மதி said...

வாழ்த்துகள் கோ நா... ஒரு சாதாரண நிகழிவில் ஒளிந்திருந்த கவிதையை அழகாக வெளியில் எடுத்து வந்திருக்கிறீர். நேரம் இருந்தால் வாசித்துப் பாருங்கள் - www.sunshinesignatures.blogspot.com

goma said...

தம் அடிக்கவோ கும்மி அடிக்கவோ,அது போல் சுதந்திரமும் தனிமையும், ஒவ்வொருவருக்கும் ,வாரத்தில் சில மணி நேரமாவது வேண்டும்....

பேட்டரி ரீசார்ஜ் ஆகும்

கோநா said...

மிகச் சரி goma,வருகைக்கு மிக்க நன்றி

சமுத்ரா said...

vaalthukkal Kona...

கோநா said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி சமுத்ரா

"உழவன்" "Uzhavan" said...

அருமையாய் இருக்கு..வாழ்த்துகள்...

கோநா said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி உழவன்

பவித்ரா நந்தகுமார் said...

வீடெனப்படுவது கவிதையை விகடனில்
வாசித்தேன்.அருமை.சில கணங்கள்
என்னை யோசிக்க வைத்த கவிதை இது.
வாழத்துக்கள்.அது என்ன கோ நா?

கோநா said...

தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பவித்ரா. கோநா என்பது பெயர்சுருக்கம் மட்டுமே பவித்ரா.