Tuesday, January 11, 2011

இருத்தலின் கேள்வி

ஒளிமின்னும் கண்களுடன்
உள்ளொடுங்கிய தவத்தில்
ஒற்றைப் பல்லி

வண்ணங்கள் மின்ன
பறந்தலைகிறது
ஒரு பட்டாம்பூச்சி

இருத்தலின் பூரண கணமொன்றில்
ஈரத்துடன் எறிந்த நாக்கில்
ஒட்டிக்கொண்டு படபடக்கிறது சிறகுகள்
கடைசி நுனி விழுங்கப்படும்போதும்

திடும்மென
கால் மடிப்பில் சிறகுகள் முளைத்து 
உடலெங்கும் வண்ணப் புள்ளிகள் தோன்றி
பல்லி பறந்தது
பட்டாம்பூச்சியின் சிறகுகளுடன்

இனி
உங்களுக்கான பள்ளிக் கேள்விகள்
  (அ) பல்லிக்கு ______ கால்கள் இருந்தன
         பட்டாம்பூச்சிக்கு உள்ள சிறகுகளின் எண்ணிக்கை_______
  (ஆ) பொருத்துக
                                        பல்லி - வண்ணத்துப்பூச்சி
                           பட்டாம்பூச்சி - மனிதன்
                                                    - ஓணான்
  (இ) பல்லியின் உணவுமண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறி
                                                     (அல்லது)
         பட்டாம்பூச்சியின் இனப்பெருக்க மண்டலத்தைப் படம் வரைந்து பாகங்களைக் குறி

கல்லூரிப் பட்டங்களுக்கான கேள்விகள்
       பல்லியின் உயிரியல் பெயர், குடும்பத்தைப் பற்றி இருபது பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுது
                                                        (அல்லது)
      பட்டாம்பூச்சியின் உயிரியல் பெயர், குடும்பத்தைப்பற்றி இருபது பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுது (தேவையான விளக்கப் படங்களுடன்)

ஆராய்ச்சிக்கான கேள்வி
                  பல்லியின் ஜீன்களை, பட்டாம்பூச்சியின் ஜீன்களாக மாற்றுவதில் தற்போதுள்ள  முக்கிய பிரச்சனைகளையும், அவற்றுக்கான உனது தீர்வுகளையும் செய்முறையுடன் விளக்குக

ஜீனியஸ்... எக்ஸ்சலென்ட்
முதல் மதிப்பெண்
கோல்டு மெடல்
வெளிநாட்டு வேலை

இப்போது
உங்கள் இருத்தலுக்கான கேள்வி
   உங்கள் பல்லி பட்டம்பூச்சியாகி
   பறந்ததைப் பார்த்தீர்களா

இருத்தலின் முன்
உங்கள் மதிப்பெண்
பூஜ்ஜியமல்ல
வெறும் புள்ளிமட்டுமே.

8 comments:

pichaikaaran said...

மிக மிக வித்தியாசமா இருக்கே!!
மனம் கவர்ந்து விட்டீர்கள்

விஜய் said...

பி.டி கத்தரி சில காலங்கள் கழித்து நடந்து போகும் என்பது போல பல்லியும் ஒருநாள் பறக்கும்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கோநா said...

நன்றி நண்பா(விஜய்)

கோநா said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பார்வையாளன்.

Philosophy Prabhakaran said...

விசித்திரமான கவிதை... வாழ்த்துக்கள்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

கோநா said...

thank u praba.

"உழவன்" "Uzhavan" said...

பல்லி பட்டாம் பூச்சியாகிப் பறப்பதை நினைத்துப் பார்க்க இதமாக இருக்கிறது.

கோநா said...

thankalin muthal varukaikkum, karuththukkum nanri uzhavan.