Tuesday, August 31, 2010

நிதானம்

உருகி ஒழுகி விடுமென்ற பயத்தில்

கரைந்து குறையும் ஐஸ்கிரீமை

அவசரமாய்ச் சுவைத்திடும்

பெண்ணின் மடியில்

கரையாத விரல்களை -நிதானமாய்

சுவைத்துச் சிரித்தபடியொரு

குழந்தை

ஒருபெண்

கல்லூரி விழாவோ

காதலன் வற்புறுத்தலோ

ஒருபெண்...

பட்டணத்துச் சாலையில்

பச்சைத்தாவணியில் காலையில்.