Monday, January 3, 2011

கைவிடப்பட்ட குழந்தைகள்

உருவானதும் 
கருப்பையிலேயே சுமக்கிறார்கள்... 

பிறந்ததும் மார்போடே
அணைத்து வைத்துக் கொள்கிறார்கள்...

சற்றே இறக்கி
இடையில் வைத்துக் கொள்கிறார்கள்
சிலகாலம்...

பின்
தரையில் விட்டு
விரல்களை மட்டும்
பிடித்துடன் வருகிறார்கள்...

மெ...ல்...ல...    மெ...ல்...ல...
விரல்களையும் விட்டுவிடுகிறார்கள்...


பெரியவர்களால்
கைவிடப்பட்ட குழந்தைகளே
பெரியவர்களாகிறார்கள்...

இல்லையெனில்
குழந்தைகளாகவே இருக்கக் கூடும்
வளர்ந்தும்.
 

-நன்றி திண்ணை வார இணைய இதழ்

6 comments:

சக்தி கல்வி மையம் said...
This comment has been removed by the author.
கோநா said...

பண்ணுகிறோம் sakthi

goma said...

அருமையான கவிதை.
அம்மாவின் அரவணைப்பு ஒரு விரலோடு முடிந்தாலும், அகத்தில் ஆயுள் முழுக்க அப்படியே தாங்கிடுவாள்

கோநா said...

உண்மைதான் goma. ஆனால் உடல் ரீதியான படிப்படியான விலக்கப் படுதலிலேயே நம் குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என உறுதிசெய்கிறோம், ஒருவேளை நம் மன ரீதியான எல்லா பிரச்சனைகளுக்கும் அதுகூட ஒரு காரணமாக இருக்கலாமோ என்று யோசித்து எழுதியது. நன்றி goma.

Anonymous said...

விரல் பிடிக்கும் குழந்தைகள்
குரல் கொடுக்கும் பின்னால்...

கோநா said...

நன்றி நையாண்டிமேளம்