Wednesday, January 19, 2011

நந்தலாலா விமர்சனமும், சாருவின் தரங்கெட்ட அரசியலும்- பகுதி - 4ஆ. மப்பு, நட்பு, தப்பு -2

மப்பு, நட்பு, தப்பு -2  


    ஆட்டியர்னு சொன்னா வாயால, மிஸ்கின இப்படி கடுப்பாகி திட்ட என்ன காரணம் சாருவுக்கு?
     மிஸ்கின் மேடையில நந்தலாலா பத்தி இருபது நிமிஷம் பேசினதோ, சாரு புத்தகங்கள சரோஜா தேவி புத்தகம்னு சொன்னதோ, நியூஸிலாந்துல மேட்டர் பண்ணினியான்னு தன்ன சாரு கேட்டதா சொன்னதோ, ரெமி மார்ட்டின் இருக்கான்னு கேட்பாருன்னு சொன்னதோ கிடையாது.
   மிஸ்கின் தன் "நண்பேண்டா" என்பதற்காக ஒரு சுமாரான, வித்யாசமான, காப்பி படத்த உலகப் படங்கள தமிழனுக்கு அடையாளம் காண்பிக்கற, வெளக்குற, உள்ளூர் படங்கள தொவச்சு தோரணங் கட்டித் தொங்கவிடுற அதிமேதாவி சாரு, கிளாசிக்கு, உலகப் படங்கள்ல இருபதுல ஒண்ணுன்னு அள்ளி விட்டும், தன்னப்போல நண்பன்னு பாக்காம தன் புத்தகங்கள பத்தி தனக்கு தோணுன உண்மைய {சரோஜாதேவி புக்குன்னு} மிஸ்கின் சொல்லிட்டாருங்குற கோபம் தான் சாருவுக்கு.
     இந்தமாதிரி விழாவுல மிஸ்கின் பேசிட்டு இருந்தப்ப அத கத்தி கூச்சல் போட்டு தடுக்காத தன் நண்பர்கள், ரசிகர்கள் மேல் வருத்தமாம் சாருவுக்கு, அவங்கல்லாம் அப்டி பேச அவர விட்டிருக்கக் கூடாதாம், அய்யா சாரு நீங்க அப்ப மேடைல தானே இருந்தீங்க உண்மையான கலகக்கார எழுத்தாளனான நீங்க ஏன் எழுந்து போய் உங்க நண்பன் மிஸ்கின்கிட்ட டைரெக்டா அப்பவே பேசறத நிறுத்தச் சொல்லியிருக்கக் கூடாது? நீங்க சபை நாகரிகத்த காப்பாத்திக்குவீங்க உங்க ரசிகர்களும், நண்பர்களும் அத விட்டுகொடுத்து தடுத்திருக்கனுமா?
      இளையராஜா இசை நல்லாயில்லேன்னு முதல்ல எழுதியிருந்தாராம், மிஸ்கின் அது படத்தோட வியாபாரத்த பாதிக்கும்னு சொன்னதுனால காலைல நாலு மணிக்கு எழுந்து அத நீக்கினாராம், அப்படீன்னா உங்க மத்த படங்களோட விமர்சனமும் அதுக வியாபாரத்த இதே மாதிரிதானே பாதிக்கும், உங்க நண்பன்னா  நீக்கிடுவீங்க மத்தவங்கன்னா கொதறிப்போட்டு மோந்துபாத்து மூத்திரம் பெஞ்சு வைப்பீங்களா?
      இவரு போடற கண்ணாடி வெல 40௦,௦௦௦000 ரூபாயாம், புத்தக வெளியீடு விழாவுக்கு 2,௦௦௦௦00 000 ரூபாய் செலவாம், இவரு போடற டிரெஸ் உலக அளவுல டாப்புல இருக்கிற பிரேண்டுகளாம், அதுலயும் முத இடத்துல இருக்கிற பிரேண்டுதான் இவருக்கு ரொம்ப புடிக்குமாம், அது இன்னும் இந்தியா மாதிரி ஏழைக நாடுக பக்கம் வரலியாம், இவரு அடிக்கிற சரக்குக, ரெமி மார்ட்டின், அப்ஸல்யூட் வோட்கா, அனீஸ்... இந்த மாதிரி தானாம்
     இது வரைக்குமான உலக வரலாறுல எந்த கலகக் காரனும், புரட்சியாளனும், இந்த மாதிரி enjoy.பண்ணுனதா சரித்திரமே இல்லை. காந்தி கூட தன்னோட பணக்கார கோட்டு, சூட்ட தூக்கி போட்டுட்டுதான் பொது வாழ்வுல இறங்கினாராம்.  இலக்கியத்துல நம்ம பாரதியார், புதுமைப்பித்தன் மொதற்கொண்டு எல்லா புரட்சி, கலகக்கார படைப்பாளிகளும் வறுமையில்தான் இருந்தாங்க. இதுக்கு காரணம் அந்த சூழ்நிலையோட வெகுஜன மக்களால அவங்களோட கருத்துக்கள ஏத்துக்கவோ, புரிஞ்சுக்கவோ முடியாம போனதும், அதுக்காக அவங்க வெகுஜன ரசனையோட தன் படைப்புகள சமரசம் செஞ்சுக்காம கடைசிவரைக்கும் போராடுனதும் ஆகும்.
     சாரு இருபது வருசத்துக்கு முன்னாடி மாடா கஷ்ட்டப்பட்டுட்டு இருந்த நீங்க எப்படிங்கையா இப்போ இந்த மாதிரி ஆப்கானிஸ்தான் சுல்தான் மாதிரி என்ஜாய் பண்றீங்க?
      வெகுஜன ஊடகங்களோட நீங்க செஞ்சுட்ட சமரசமும், நவீன இலக்கியத்த அவங்ககிட்ட உங்க குடிக்கும், டவுசருக்கும் நீங்க வித்துட்டதும்தானே சாரு.
       வலைல அவரோட ஒரு வாசகரோட மின்னஞ்சல போட்டிருக்காரு, அதுலயே தெரியும் தன்னோட வாசகர்கள எவ்வளவு கேனையங்கன்னு சாரு நெனைக்கிறார்னு, சொல்ல வருத்தமாத்தான் இருக்கு அப்டித்தான் அவங்களும் இருக்காங்க. 
     அந்த மின்னஞ்சலோட சாராம்சம் என்னன்னா, நவீன எலக்கியத்த காப்பாத்தற யுக புருசர்களா இந்த நூற்றாண்டோட மத்தியில ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஸ்ணன், மனுஷ்யபுத்திரன், சாருன்னு பஞ்ச பண்டிதர்கள் அவதரிச்சு வந்தாங்க, கலியுகத்துல இருந்த மோசமான எலக்கியச் சூழலினால, மனம் மயங்கி ஜெயமோகன், எஸ்.ரா, மனுஷ்யபுத்திரன் மூணு பேரும் அவதார நோக்கத்த மறந்து பணம் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டங்க, ஆனா கோணங்கி , சாரு ரெண்டு பேர் மட்டும் கொண்ட கொள்கைல உறுதியா இருந்து பணம் சம்பாதிக்காம, அடுத்த வேளை சாப்பட்டுக்கே கஷ்டப் படறாங்காமா... கோணங்கி பத்தி சொன்னது சரிதான். ஆனா சாருவையும் சேர்த்துச் சொல்றாரு பாருங்க, என்ன கொடும சாரு இது. இத கூச்சபடாம publishவேற பண்ணியிருக்காரு நம்ம சாரு.
    புத்தக வெளியீட்டு விழாவப்ப சாரு படத்துக்கு பீரால அபிசேகம் பண்றாங்க அவரோட வாசக ரசிக சிகாமணிகள். இதுக்கு சினிமா ஸ்டார்களோட ரசிகர்கள் எவ்வளவோ பரவாயில்லையே... அவங்க பால்லதானே அபிசேகம் பண்ணுவாங்க. இப்படிப் பண்ற உங்க ரசிகர்களையும், இதெல்லாம் அனுமதிக்கிற உங்களையும் நெனச்சா எனக்கு கொடங்டங் கொடமா வாயில எச்சியும், bladderla மூத்திரமும் ஊருது, அதெல்லாம் எங்க துப்பறது, எங்க பெய்யறது சாரு? எனக்கும்  உங்க போட்டோ ஒன்னு குடுப்பீங்களா?
      எல்லாப் பெற்றோரும் தன் கொழந்த ரொம்ப அறிவாளின்னுதான் நம்பறாங்க, நான் சொல்லறது கொழந்தைய இருக்கிற வரைக்கும், அந்த மாதிரி சாருவும் நம்பறது தப்பில்ல, 
     ஆனா கூட என்ன சொல்றாருன்னா, அவரு பொண்ணு வைஷ்ணவ குலமாம், அதனால பயங்கர சார்ப்பாம்,  அறிவாளியாம், இவ்வளவு முற்போக்கா, கலகக்காரனா ஊருக்கு எழுதுனாலும், சாரு மனசுக்குள்ள எவ்வளவு பிற்போக்குவாதின்னு, இத வச்சே தெரிஞ்சுக்கலாம், குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்னு எங்க நவீன பாட்டன் சொன்னது நீங்க படிக்கலியா சாரு? 
      அப்ப, எல்லாக் கொழந்தைகளையும், உங்க சக எழுத்தாளர்களையும் கூட இப்படித்தான் பாக்கறீங்களா? வைஷ்ணவ கொலத்துக்கும் அறிவாளித்தனத்துக்கும் ஏதாவது அறிவியல் ரீதியா சம்பந்தம் இருக்குங்கிறதுக்கு எதாச்சும் ஆதாரம் வச்சுருக்கிங்களா? அந்த கொலத்துல  முட்டாளே யாருமில்லையா? ஏன், அதான் கண்ணு முன்னாலேயே கல்லு மாதிரி நீங்க இருக்கிங்களே சாரு, உங்கள விட நல்ல உதாரணம் வேற வேணுமா?
     கால்ல விழுவேன் இல்ல கால வாரிவிடுவேன், இதுதான் ஒட்டுமொத்த தமிழனோட குணம், கலாச்சாரம்னு கூசாம சொல்றீங்களே சாரு தமிழனோட கலச்சாரத்த, இந்தமாதிரி இழிவா வரையறுத்துச் சொல்றதுக்கும், எழுதறதுக்கும் உங்களுக்கு யாரு அதிகாரங் கொடுத்தது ?
     இதுவே வேற இனமா இருந்த இப்படி சொன்னவன சும்மா விடுவாங்களா? தமிழனுக்கு இருக்கிற இந்த சகிப்புத் தன்மையும், நமெக்கெதுக்கு  வம்புன்னு ஒதுங்கிப் போறதும்தான், சாரு மாதிரி இங்கிருந்தே எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு, இந்த கலாச்சாரத்தையே திட்றவங்களுக்கு ரொம்ப எளக்காரம போச்சு.
     அய்யா சாரு நீங்க தமிழ்லதான் எழுதனும்னு தமிழ் தாய் ஒன்னும் ஒத்தக் கால்ல நிக்கலியே? ஏன் நீங்க எழுத்தளர்கள கொண்டாடுற இங்லிஸ், எதியோப்பிய, காங்கோ மொழிகள்ல எழுதக் கூடாது?
     அந்த சாமியாரப் பத்தி, ஆகா, ஓகோன்னு ரசிகர்கள் கிட்ட சொல்லிட்டு,  cd ரிலீஸ் ஆனதும் நா ஒரு பச்சக் கொழந்த வாயில வச்சாக் கூட சப்பத் தெரியாது வெரலன்னு ஒரு அந்தர் பல்ட்டி அடிச்சு, வாசகர்கள்கிட்ட இருந்து தப்பிச்சுட்டதுமில்லாம, யாராச்சும் கேள்வி கேட்டுருவாங்கன்னு, சூட்டோட சூடா பிரபல வார இதழ்ல சரசம், சல்லாபம், சாமியாருன்னு எழுதி, உங்க வாசகர்களோட அரிப்ப சொரிஞ்சு விட்டதுமில்லாம, உங்க தார்மீகப் பொறுப்புக்கு கல்தா குடுத்துட்டு, நல்லா கல்லாவும் கட்டிட்டீங்க, ஐயோ சாரு,  நீங்க எவ்வளவு பெரிய அப்பாவி, கொழந்த.
   ஒலகக் காமெடியே இதுதான், அதாகப் பட்டது, இப்ப இருக்கிற எலக்கிய சூழ்நிலைய, வளர்ச்சிய சாரு, எஸ்ரா, மனுஷ்யப் புத்திரன் மூணு பேருந்தான், அவங்களோட ரத்தம், வேர்வை, விந்து, எல்லாஞ் சிந்தி , வாழ்க்கையே தியாகம் செஞ்சு உண்டாக்குனாங்கலாம்.
    என்ன சாரு மப்புல ஒளர்றது தப்பில்லைதான், அதுக்காக, நாங்க மூணு பேருந்தான் சரக்கடிச்சுட்டு சங்க இலக்கியமெல்லாம் எழுதுனோம், கம்யூட்டர கண்டுபுடிச்சோம், நெலாவுக்கு ராக்கெட் விட்டோம், வெங்காயத்துக்கு வெலய ஏத்துனோம், எலக்கியத்த வளத்தோம்ன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவரு. கேக்கறவன் கேனையனா இருந்தா, ரஞ்சிதாவோட நித்தி, கட்டில்ல ஹடயோகதான் பன்னுனார்னு சொல்வீங்களே.
     20 வருசத்துக்கு முன்னாடி மாடா ஓலைச்சு ஓடா தேஞ்ச நீங்க இப்ப குடிக்கற சரக்கு, போடற டிரஸ்சு போடற கண்ணாடி, இன்னும் போடற பொ... இதெல்லாம் பார்த்தா நீங்க தியாகம் பண்ணுன மாதிரி தெரில சாரு,  இலக்கியந்தான் ரத்தம் சிந்தி, தியாகம் பண்ணி ஊத்தி, ஊத்தி, உங்கள வளத்துட்ட மாதிரி தெரியுது. 
     பாரதி, புதுமைப் பித்தன்....இன்னும் பல நவீன இலக்கிய வாதிங்க எல்லாரும் சேர்ந்து சமரசமில்லாம வருமையில கஷ்ட்டப்பட்டு வளத்துட்ட சூழ்நிலை இது. 
     முக்கியமா இந்த நூற்றாண்டோட IT , பொருளாதார வளர்ச்சியால, 25 வயசுக்குள்ளயே எல்லா சந்தோசத்தையும் அனுபவிச்சுட்டு விரக்தியா வாழ்க்கைய இலக்கியத்துல தேடுற இளைஞர் கூட்டம்தான் இப்போதைய இலக்கியச் சூழ்நிலைக்கு முக்கிய காரணம்.
    உங்க எழுத்து வக்கிரக்காரன்களோட உறுத்தர மனசாட்சிய மரத்துப்போகச் செய்யிற சரக்கு, அபின், கஞ்சா, போல இன்னொரு போதைதான் சாரு.  அபின், கஞ்சா, சரக்கு கூட அந்த குற்ற உணர்ச்சிய மறக்கடிக்குமே ஒழிய அழிக்காது,  ஆனா உங்க எழுத்து எல்லா வக்கிரங்களுக்கும் வக்காலத்து வாங்கறதுமில்லாம, அதையெல்லாம் ஏதோ இயல்பானது, ஆரோக்கியமானதுதான்னுங்கற மாதிரி காட்டுது.
     நீங்க பயங்கர புத்திசாலி, உங்க எழுத்த நீங்க நம்பமாட்டிங்க, அதனால அது உங்கள ஒன்னும் செய்யாது, {தன்னோட விஷத்தால பாதிக்கப் படாத ஒரு பாம்பைப் போல} ஆனா உங்க எழுத்த நம்பற, அதனால தூண்டப் படற, உங்களோட முட்டாள் ரசிகர்கள நெனச்சாத்தான் பாவமா இருக்கு. 
     உங்கள மாதிரி ஒரு ஆளுமையுள்ள ஆள் நவீன இலக்கியத்தோட ickonல ஒருத்தரா இருக்கிறத நெனைக்கும் போது, எலக்கியமும், அத எழுதற உங்கள மாதிரி ஆள்களும், அத வாசிக்கிற எங்களமாதிரி வாசகர்களும், இந்த நாடும்  நாசமாய் போகட்டும்னுதான் சொல்லத்தோணுது சாரு.                   
  
          

34 comments:

Yaathoramani.blogspot.com said...

"தன்னோட விஷத்தா லே பாதிக்கப்படாத பாம்புபோல.."
இதைவிட மனதால் கெட்டு அலைபவர்களை
வேறு எந்த வார்த்தையால் மிகச் சரியாகச் சொல்ல முடியும்?

வெப் தமிழன் said...

வாழ்த்துக்கள்...நான் நினைச்சத நீங்க எழுதிட்டீங்க :)

கோநா said...

varukaikkum, karuththukkum nanri ramani

கோநா said...

web thamilan, thankalin muthal varukaikkum, valththukkum mikka nanri.

Anonymous said...

Exactly what I thought. Why don't we suggest the people who does not like Charu, to not to read his crap. The people who read his blog and appreciate it won't change their minds. They can come out of that sewer dam only if they are able to recognize that. Nobody can help them from outside. Not everyone is like Dr.Nash who could reconize the disease in his mind and cure it.

டக்கால்டி said...

படித்தேன்...அவரை பற்றி எழுதி ஏன் உங்கள் எனர்ஜியை வேஸ்ட்டு செய்கிறீர்கள்.

கோநா said...

amaam takaalti, neenkal sonnathai naanum unarkiren, inimel oru pakka naveena yelakkiya vathiya amaithiya irukka try panren. varukaikkum, karuththukkum mikka nanri.

கோநா said...

thanks for ur comment anonymous.

Madurai pandi said...

நல்லா எழுதி இருக்கீங்க!!
--
மதுரை பாண்டி
http://maduraipandi1984.blogspot.com

கோநா said...

thankal varukaikkum, paaraattukkum mikka nanri mathurai pandi.

பா.ராஜாராம் said...

ப்ச்!

எதுக்கு இவ்வளவு விரயம் செய்கிறீர்கள், அதுவும் நீங்கள்?

(நீங்கள் என்பதால்தான் இந்த பின்னூட்டம் கூட கோநா)

கோநா said...

மதிப்புக்குரிய பா.ரா. அவர்களுக்கு,
என்ன செய்தும் தீராத கோபத்துடன் பல மனப் போராட்டங்களைத் தாண்டி ஒரு கட்டுரை எழுதி பதிவாக போட்டுவிடுவோம் என முடிவு செய்து, அதற்காக நந்தலாலா படத்தை 4 முறை பார்த்து குறிப்புகள் எடுத்து எழுத ஆரம்பிக்க அதுவே 4 தனிதனி பதிவுகள் போடுமளவுக்கு நீண்டுவிட்டது, இடையில் பார்த்தால் இவர்களின் நட்பு பார் சண்டையாக ஆரம்பித்து குழாயடிச் சண்டையாகிவிட்டது. அவற்றைப் பற்றிய பதிவுகளையும் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் போதே புரிந்தது என்னுடைய எவ்வளவு நாட்களை இது எடுத்துக் கொண்டது என்பது. பத்தாதென ஒவ்வொரு வரி எழுதும் போதும் பெரும்பாலானோர் இதை பப்ளிசிட்டி ஸ்டன்ட் என நினைக்கவும், சாருவின் அபிமானிகளுக்கு என்மீதான கோபமும், நடுநிலையாளர்களுக்கு கூட இது அதிகப் பிரசங்கித்தனமாக தோன்றவும் கூடும் என்பதான மன அலைக்களிப்புகளுக்கிடையில் இதை எழுதி முடித்த பின் எனக்கு முதலில் வந்தது ஒரு விடுதலை உணர்வு மட்டுமே.
இரண்டு மாதங்கள் எனது எழுத, படிப்பதற்கான நேரத்தையும், மன அமைதியையும் இந்த பணி மிகவும் பாதித்தது. வேலை செய்யும் இடங்களில், வீட்டில் கூட ஒருவித இறுக்கமான மனநிலையும், யாருடனும் எப்போதும் போல் பேச இயலாமல் ஒருவித பதட்டமான யோசனையுடனும் இருந்த என்னை பல பேர் உடம்பு சரியில்லையா என விசாரித்தனர்.
இதை எத்தனை பேர் படித்தார்கள் என்பது கூட எனக்கு உறுதியாக தெரியாத நிலையில் நீங்கள் சொல்வது போல் இதற்காக நான் செலவு செய்த நாட்கள், அடைந்த மன போராட்டங்கள், அனைத்தும் எனது தனிப்பட்ட வாழ்வுக்கு, அவசியமில்லாத விரயம் என்பதை உணர்கிறேன்.
இனி மேல் எல்லா துறைகளில் நடக்கும் அநீதிகளை{இலங்கை பிரச்சனை, ஆன்மிகம், அரசியல், சினிமா, மேலதிகாரியின் செயல்கள்...} சகித்துக் கொண்டு அமைதியாய் இருப்பதைப் போல இலக்கியத்திலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என உறுதிஎடுத்திருக்கிறேன். அல்லது எல்லாவற்றையும் போல இவ்விசயத்திலும் போகப்போக மனம் மரத்துப் போய்விடுமென நம்புகிறேன்.
மிக்க நன்றி பா.ரா.

தமிழ்நதி said...

நீங்கள் யாரெனப் பார்க்க வழித்தடத்தைத் தொடர்ந்தேன். தெளிவாகத்தான் இருக்கிறீர்கள். ஆம்... இவ்வாறான விடயங்களில் நேரத்தை விரயம் செய்வதை நிறுத்தவே வேண்டும். (எனக்கும் சேர்த்துச் சொல்லிக் கொள்கிறேன்)

கோநா said...

தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்நதி. பா.ரா. அவர்களுக்கு எழுதிய பதிலையே தங்களுக்கும் காப்பி & பேஸ்ட் பண்ணுகிறேன். தங்களின், பா.ராவின் அறிவுரையை உணர்கிறேன். மீண்டும் நன்றி.

உண்மைத்தமிழன் said...

உங்களுடைய கேள்விகள் நியாயமானவை..! உடன்படுகிறேன்..!

கோநா said...

வருகைக்கும், புரிந்து கொண்டமைக்கும் நன்றி உண்மைத்தமிழன்.

கோநா said...

சிவகுமார் தங்களின் வருகைக்கும், புரிந்து கொண்டதுக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, தங்கள் பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை, அதற்காக தாங்கள் வருத்தப் பட்டால் என்னை மன்னிக்கவும்.

பா.ராஜாராம் said...

கோநா,

பாஸ் பண்ணுங்க. அவ்வளவே!

கோநா said...

சரிங்க பா.ரா. நீங்க சொன்னதுக்கப்புறம், மக்க நாங்கல்லாம் மறு பேச்சில்லாம கேட்டுத்தானே ஆகணும், நன்றி.

G.Ganapathi said...

நிறைய சொல்லணும் .......... ஆனா அதை எல்லாம் சொல்லி என் உங்களை கஷ்ட படுத்தனும்னு வேண்டாம் விடுகிறேன் . மிஸ்கினோ சாருவோ அல்லது நீலப்படத்தில் நடிக்கும் நடிகையோ வர்களுடைய வேலையை கட்சிதமாய் செய்த பின் அந்த வேலை அந்த படைப்பை மட்டுமே நாம் உணர்வது அல்லது ஏற்றுகொள்வது நலம் . தனிப்பட்ட வாழ்க்கையை அல்லது அவர்களின் உரிமையை யார் ஒருவரும் விமர்சிக்க அருகதை கிடையாது என்பது என் எண்ணம் . தேகம் நாவலை படித்தால் மிஸ்கின் சொன்னது போல் தான் இருக்கும் ஆனால் அப்படி இல்லை அது வேறு விசியம் அவர் கருத்தை அவர் வெளிபடுத்தி இருக்கிறார் . எனக்கு என்னவோ நீ அப்படி சொல் நா இப்படி சொல்லிக்கறேனு நடந்த வியாபார தந்திரமாய் கூட இருக்கலாம் . தேகம் புத்தக கண்காட்சியில் 1200 கும் மேல் விற்றதாக சேதி . படைப்பாளிகளில் படைப்புகளை அதன் மையத்தில் இருக்கும் உணர்வுகளை மட்டும் மதிக்க கற்றுகொள்வோம் பின் வருவனவற்றை வெறும் சேதியாக மட்டும் பாவித்து கொள்வது எல்லா சூழலுக்கும் நல்லது .

G.Ganapathi said...

அப்பறம் ரஞ்சிதா நித்தியானந்தா பத்தி பேசறத எல்லாம் விடலாமே . எந்த பெண் அல்லது ஆண் அப்படி இல்லை என்று நினைகிரிங்க ?... வைப்பு கிடைக்காத வரை எல்லாரும் உத்தமன் தான் உத்தமி தான் . காமம் பற்றிய பரினமத்தின் புரிதல் இல்லை என்பதால் இது எல்லாம் வேறு மாறி என்று நினைக்கிறோம் . அப்படி இல்லை . விசவா மித்திரரையே மயக்கும் காமம் என்று சொல்லப்பட்டு வந்து இருக்கிறது இதி நித்தியானந்த எல்லாம் எந்த மூளைக்கு ?.. அவர்களின் தனிப்பட விசியம் . அதை ஒலி பரப்பிய நீல தொலைகாட்சி மஞ்சள் பத்திரிக்கை மேல் தான் உங்கள் கோபம் வேதனை அற்றமை இருக்க வேணும் .

நித்யன் said...

வெகு நியாயமான கேள்விகள்.

அன்பு நித்யன்

கோநா said...

நித்யகுமாரன், வருகைக்கும், புரிந்துகொண்டமைக்கும் மிக்க நன்றி

கோநா said...

G.Ganapathi, தங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி. எந்தவொரு படைப்புகளைப் பற்றிய கருத்து என்பது தனிமனிதரால் முழுமையாக வரையறுத்துக் கூற இயலாதது என்றே நம்புகிறேன், ஒவ்வொரு வாசகனுக்கும் அது அவன் அறிவு, அனுபவம், சூழ்நிலை, ஏன் அவனுடைய அப்போதைய மனநிலை ஆகியவற்றைச் சார்ந்து மிகவும் அந்தரங்கமான வாசிப்பு அனுபவங்களை தரக் கூடும், ஆனால் சாருவின் ரசிகர்கள் பீரால் அபிசேகம் செய்தது, முட்டாள்தனமான மின்னஞ்சல்களை அவருக்கு அனுப்புவது, அதையும் அவர் பிரசுரம் செய்வது போன்ற விசயங்களே அவருடைய படைப்புகள் எத்தகைய தாக்கத்தை பொதுவாக ஏற்படுத்தியிருக்கின்றன என்று சொல்லத் தூண்டியது. மற்றபடி என் கேள்விகளும், கோபங்களும் அவர் எழுதும் பத்தி எழுத்துக்கள்... மேலும் நீள்கிறது.

சாமியார் விசயத்தில் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன், அனால் நானும் அதைத்தான் கூற வருகிறேன், அதாவது சாமியார் மாட்டிக்கொண்டதும், சாரு மிகப் பெரிய அப்பாவி வேஷம் போட்டுக் கொண்டு சாமியாரைப் பற்றி சுடச் சுட எழுதி கல்லாக் கட்டிக் கொண்டார் என. மற்றபடி தனிமனித ஒழுக்கம் என்பது அவரவது தனிப்பட்ட விஷயம், சுதந்திரம், அடுத்தவர்களைப் பதிக்கதவரையில் என்பதே என் புரிதல்.

இதைப் பற்றிய உரையாடல்களை முடித்துக்கொள்வோம் கணபதி. இனி அவரவருக்குள் உரையாடி ஒரு தெளிவுக்கு வர முயல்வோம்.

நன்றி.

vinthaimanithan said...

இவ்ளோ மெனக்கெட்டு எழுதுற அளவுக்கு அந்தாளு வொர்த்து இல்லீங்க!

கோநா said...

விந்தைமனிதன் தங்களின் மறு வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி, நானும் அவ்வாறே
இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
இப்பொது இவர்கள் கூட்டம் சேர்த்து கூத்து அடித்தாலும், அடுத்த தலைமுறை வாசகர்கள், விமர்சகர்கள் இவர்களை ஒதுக்கிவிட்டு இக்காலகட்டத்தின் உண்மையான படைப்பாளிகளை மீட்டெடுப்பார்கள் என்றே நம்புகிறேன், பாரதிக்கு, புதுமைப்பித்தனுக்கு நிகழ்ந்தது போல.

சிவகுமாரன் said...

என் பின்னூட்டம் என் சிறுபிள்ளைத் தனத்தையும் அதை பிரசுரிக்காமல் விட்டது உங்களின் பெருந்தன்மையையும் காட்டுகிறது கோநா.
எண்ணித் துணிவர் பெரியர்.

கோநா said...

வாங்க சிவா...பெரியவனல்லா இல்லீங்க. நீங்க கோவிச்சுக்காம புரிஞ்சுகிட்டதே மகிழ்ச்சியா இருக்கு. உங்க கவிதைகளெல்லாம் பட்டைய கெளப்புதுங்க. இதே ஸ்பீடுல போய் ஒரு ஓத விட்டீங்கன்னா சினிமாக் கதவு தானா திறக்கும் சிவா.

மதுரை சரவணன் said...

உங்கள் கேள்வியின் நியாயம் இருப்பினும் , சாரு அனைவராலும் பேசப்படும் ஒரு எழுத்தாளன் என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளுங்கள். சாரு என்னைப் பொறுத்தவரை ஒரு சுய விளம்பர தேடியாக இருந்தாலும் , நல்ல எழுத்தாளன் .. எனவே சாரு வாழ்க. சாரு புகழ் ஓங்குக..

கோநா said...

karuththukku nanri saravanan.

சிவகுமாரன் said...

நன்றி கோநா . எனக்கு சினிமாவில் ஆர்வமில்லை கோநா. 40 வயசில புதிய முயற்சிகள் எடுக்கவும் தயக்கம்

கோநா said...

shiva nijama avalavu vayasayittutha, photo paarththa theriliye, kalloori kaala photovai pottu irukkireerkalo?

Vick... said...

மதிப்பிற்குரிய கோநா அவர்களுக்கு வணக்கங்கள்.

நீங்கள் சாரு வை பற்றி வைத்த விமர்சனத்தில் வாசகர்களுக்காக வருத்தப் பட்டதில் ஒரு உண்மையான கோபம் தெரிந்தது. நவீன இலக்கிய புரட்சியில் பாரதியையும் புதுமைப்பித்தனையும் ஞாபகம் வைத்திருப்பது ஆறுதல் தருகிறது.

இப்படிக்கு,

விக்...

கோநா said...

thank u for ur first visit and understanding vick.