Sunday, January 9, 2011

குழந்தைக் கனவினுள்...

இரண்டிரண்டு படிக்கட்டுகளாய் 
தாவித்தாவி வந்ததில் 
தவறி விழுந்து
தலையில் பெரிய காயம்.

ஊசி வேணா.. வேணா...

அழுதவளை 
அதட்டி இழுத்து வந்த அப்பாவுடனும்
அறியாமல் இடித்துவிட்ட படிக்கட்டுடனும்
அழுத்திப் பிடித்துக் கொண்ட சிஸ்டருடனும் 
ஆறு தையல்கள் போட்ட என்னுடனும்
 கா  விட்டுவிட்டு 
கண்ணீர் கோடுகளாய் காய 
அழுதபடியே 
தூங்கிப்போகிறாள் ஓவியா.

அனால்ஜெசிக்குகளின் மந்திரத்தில்
வலி மறந்த கணமொன்றில் 
பழம் விட்டுவிடுவாளென 
குழந்தைக் கனவொன்றினுள்
நுழைந்து காத்திருக்கிறோம் 
எல்லோரும் நம்பிக்கையுடன்.

-நன்றி திண்ணை இணைய இதழ்  
    

6 comments:

சாந்தி மாரியப்பன் said...

அருமையாக இருக்கிறது கவிதையும், காத்திருப்பும்..

விஜய் said...

நண்பா

இவ்வளவு நாட்களாக எப்படி இழந்தேன் உங்களது கவிதைகளை

யதார்த்த கவிதைகளின் அரசர் பா.ரா. போல் உங்களது நடை அசர வைக்கிறது.

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கோநா said...

நண்பா விஜய் தங்களின் மனந் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி

கோநா said...

நண்பா விஜய் பா.ரா. , நீங்கள், {விஜய்}, நேசமித்திரன் அனைவரும் நான் இனிமேல் மிகவும் முயற்சி செய்து அடைய வேண்டிய தளத்தில் இருக்கிறீர்கள், தங்கள் பாராட்டை தங்களின் அன்பென்றும், ஆசிர்வாதமென்றும் கொள்கிறேன், நன்றி.

கோநா said...

தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி அமைதிச் சாரல்.

மதுரை சரவணன் said...

super... vaalththukkal