Tuesday, January 11, 2011

உச்சத்தின் உச்சிக்குச் செல்லும் பாதை

எப்பொழுதும்
துவங்குங்கள்
சமநிலையிலிருந்தே...

இரு கரங்களையும்
இறுக்காமல்
பற்றிப் பரவுங்கள்
மெதுவாய்...

இடுப்போடு இடுப்பும்
பாதங்களோடு  பாதங்களும்
இருக்குமாறு
பொறுத்திக் கொள்ளுங்கள்
உறுத்தாமல்...

திருகியோ,
அமுக்கியோ
உங்களுக்கெப்படி வாய்த்திருக்கிறதோ
அப்படியே ஆரம்பியுங்கள்...

சூடேறும்வரை
மிதமாய் உருட்டுங்கள்
இதமாய் முறுக்கி
சப்தமொழி அறிந்து
சீராய் கூட்டுங்கள்
வேகத்தை.

கவனித்துக் கடப்பதற்கு 
காத்துக் கொண்டிருக்கும் 
மேடுகள் பள்ளங்களை
ஊன்றிக்  கவனியுங்கள்.

வளைவுகளில், நெளிவுகளில்
வளையுங்கள், நெளியுங்கள்
வேகத்தை குறைத்தபடி,
நிலையை மாற்றியபடி
கவனத்தில் வையுங்கள்
காயங்கள் அத்யாவசியமில்லை...

நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் நிரம்பித் ததும்புவது
உச்சத்தின் உச்சியை
அடையும்வரை மட்டுமே...

அடைதலின் இறுதியில்
ஆசைகளின் முடிதலில்
ஆழத்தில் தோன்றுமொரு
கண்ணுக்குத் தெரியா
கருந்துளை வழியே
கசிந்து கசிந்து
வெறுமையாகி விடுவீர்களென்பதால்
இலக்கு பற்றிய எண்ணங்களை
தூக்கிச் சுமந்து செல்லாமல்
எடுத்து எறியுங்கள்
இலேசானதும்
வழியெல்லாம் கொண்டாட்டம்
வலிகூட கொண்டாட்டம்...

இறுதியாய் ஒன்று
ஆசைகள் வடிந்து
அடங்கிய பின்னும்
உங்கள் நேசமிருக்கட்டும் அப்படியே...

உச்சத்தின் உச்சிக்குச்
செல்லும் பாதை
உங்களை
அன்புடன் வரவேற்கிறது
வருக வருக,
உங்கள் பயணம் இனிதாக
நல்வாழ்த்துக்கள்.

      
   

7 comments:

பனித்துளி சங்கர் said...

சிந்திக்க வைக்கும் அளவில் சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்

கோநா said...

varukaikkum, vaalththukkum nanri paniththuli sankar

ரசிகன்! said...

சார்! சூப்பர் சார்!
ரொம்ப ரொம்ப பிடிச்சுது :)

கோநா said...

nandu@norandu, thank u for ur visit.

கோநா said...

rasikan, thanks for ur visit and comment.

விஜய் said...

இரு அர்த்தக்கவிதையா நண்பா !!!

அட்டகாசம்

வாழ்த்துக்கள்

விஜய்

கோநா said...

yes, thanks vijay...