Friday, December 31, 2010

நந்தலாலா விமர்சனமும் சாருவின் தரங்கெட்ட அரசியலும்- பகுதி-3- 360 டிகிரி, 180 டிகிரி, 90 டிகிரி, ௦ ௦0 டிகிரி.

 360 டிகிரி, 180 டிகிரி, 90 டிகிரி, ௦ ௦0 டிகிரி. 



     தமிழ்த் தாய் வயிற்றில்  தவறுதலாய் பிறந்துவிட்டதாலேயே கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கும் அதிமேதாவி, அப்பாவி எழுத்தாளர் சாரு பிரபல மாத இதழில் நந்தலாலா படத்துக்கு எழுதிய விமர்சனக் காமெடியும், அக்காமெடி பற்றி ரெமி மார்ட்டினுடன் அனீஸ் கலந்து நான் அடித்துவிட்டு போதையில் சாரு வலைமனையில் அவர் சொன்ன, அவர் வாசக, வாசுகிகள் சொன்னதாக எழுதி வைத்திருந்த குறிப்புகளையும் சேகரித்து வைத்திருந்ததை முனியாண்டியின் ஜீரோ டிகிரி படித்த பூனை தட்டிவிட்டதால் அதை ஒழுங்கு படுத்த நேரமின்றி அப்படியே கொடுத்திருக்கிறேன்.
        
     இதை படிப்பதோ, புரிந்துகொள்வதோ, தமிழ் கூறும் நல்லுலகின் பிறவி ஊழே அன்றி என்னால் தொகுக்கப் பட்டதாலேயே இது என்னுடைய பிரச்சனை அல்ல.எனக்கு,  என்னால் இக்காரியம் நடந்திருக்கிறது என்ற சிறு திருப்தியும், 10௦ நாட்களாய் இதற்கு உட்கார்ந்து மெனக்கெட்டதால்  அந்த இடத்தில் சிறு வலியும், முதுகு வலியுமே மிச்சம். இனி நான் சேகரித்துவைத்திருந்த குறிப்புகளையும், எழுதிய குறிப்புகளையும் முனியாண்டியின் ஜீரோ டிகிரி படித்த பூனை களைத்துப் போட்டவாறே தருகிறேன். தமிழக,எதியோப்பிய, கிரேக்க, ஆங்கில, ஆப்பிரிக்க வாசக, வாசுகிக்கு நன்றி. 



எனக்கு ரெமி மார்ட்டின் பிடிக்கும்.

மிஷ்கினின் வாசிப்பு எல்லோரையும் வியக்கச் செய்யும் ஒன்று.

ஒரு கல்யாண வீடு இருக்கிறது.  அங்கே வரும் ஒருவன் நட்ட நடு பந்தலில் ஜட்டியை வழித்துக் கொண்டு உட்கார்ந்து மலஜலம் கழித்தான் என்றால் அவனை சும்மா விடுவீர்களா?  அவன் பைத்தியம் என்றால் விட்டு விடலாம்.  வேண்டும் என்றே செய்கிறான் என்றால் அவனை என்ன செய்யலாம்? மிஷ்கின் செய்தது அதுதான்

சாருவைக் கூப்பிட்டால் “ரெமி மார்ட்டின் இருக்கிறதா?” என்று கேட்பார்.  புத்தக வெளியீட்டு விழாவில் மிஷ்கின் என்னைப் பற்றி தெரிவித்த விபரம் இது.  இதைப் பற்றி நான் சொல்ல விரும்புகிறேன்.  நான் மது அருந்துவதை நிறுத்தியதற்கே மிஷ்கின் தான் காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா?  அதுதான் உண்மை.  இரவு ஒன்பதுக்கு மேல் மிஷ்கினிடமிருந்து போன் என்றாலே நான் பீதி அடைய ஆரம்பித்தேன்.  எனக்கு ரெமி மார்ட்டின் பிடிக்கும்.  ஆனால் மிஷ்கினுடன் தண்ணி அடிப்பது ரொம்பக் கொடுமையான விஷயம். 
நாங்கள் அந்தப் படத்தை அதற்கு முன் இரண்டு முறை பார்த்திருந்த போதும் தொலைக்காட்சியில் பேச வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சிக்கு முந்தின இரவு மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்த்து விட்டு இரவு முழுவதும் விழித்திருந்து படத்தைப் பற்றி என்ன பேச வேண்டும் என்று குறிப்புகள் எடுத்துக் கொண்டோம்.  பிறகுதான் தொலைக்காட்சியில் பேசினோம்.  இவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டது எதற்காக? மிஷ்கின் ஒரு சினிமாக்காரர் என்பதற்காகவா? அவர் என்னுடைய நண்பர்; “நந்தலாலா ஒரு திருட்டுப் படம்; அதில் மிஷ்கின் முண்டக்கட்டையாக நடித்திருக்கிறார்; ப்ளூ ஃபிலிம் மாதிரி இருந்தது.  ஒரு விபச்சாரி வேறு வருகிறாள்; அதனால் அது ஷகீலா படம்” 

தெளிவான குரலில் மிஷ்கின் அந்த இளைய ராஜா பற்றிய பதிவை எடுத்து விடச் சொன்னார்.  காரணம், அது அந்தப் படத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை ஏற்படுத்தி அதன் வெற்றியைப் பாதித்து விடும்.  அதைக் கேட்டதும் அந்தப் பதிவை அந்த நிமிடமே நீக்கி விட்டேன்.  ஏனென்றால், தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றி அமைக்கக் கூடிய அந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று மனமார ஆசைப்பட்டேன்.  அதனால் அந்தப் பதிவை காலை நான்கு மணிக்கு நீக்கினேன்.
    
-எனில் அய்யா அப்பாவி சாரு அவர்களே நீங்கள் செய்யும் மற்ற படங்களின் விமர்சனம் அவற்றின் வசூலை பாதிக்குமே என்று யோசித்ததில்லையா? அப்படி நம்புகிறீர்களா? நீங்கள் நந்தலாலா பாட்ஷா ரேஞ்சுக்கு வசூலில் சாதனை படைக்கும் என்று ஆரூடம் சொன்னீர்களே அது ஏன் பலிக்கவில்லை, இன்னும் இந்த ஊர் உங்களை நம்பிகொண்டிருக்கிறது என நீங்கள் நம்புகிறீர்களா?   

ஹாய் சாரு,
இனிமேல் நீங்கள் எழுத்தையே நிறுத்திவிடலாம் என தோன்றுகிறது
-
       -ஐயா அதிமேதாவி அப்பாவி சாரு அவர்களே மேலே உங்கள் வாசகர் சொல்வது போல் ஏன் நீங்கள் எழுதுவதை நிறுத்துவது பற்றி யோசிக்கக் கூடாது?

அன்றைய தினமே அவரோடு மனதளவில் என் நட்பு முறிந்து போனது.  நான் என்ன கிரிமினலா?  சமூக விரோதியா?  ஊழல் பேர்வழியா?  பயங்கரவாதியா?  என்னோடு ஏன் பழக வேண்டாம் என்று 50 பேர் சொல்கிறார்கள்.   அவர்களெல்லாம் மிஷ்கினின் நண்பர்களா? 
 எல்லோரும் சேர்ந்து களவாடப்பட்ட ஒரு படத்தை கலைப்படைப்பாக ஆக்கி விட்டீர்கள்.   இப்போது  மிஷ்கினுக்கு பாராட்டுகள்;  உங்களுக்கு அவமானங்கள்…

எதுக்கு சாரு உங்களை படிக்கணும் என்று ஒரு அதி மேதாவி கேள்வி ஒன்றையும் கேட்டார்…சாரு அதற்க்கு ஒரு நச் பதிலை விழா நன்றி உரையில் சொன்னார்…என்னைப் பலரும் கேட்பார்கள் என்ன சாரு நீங்கள் தான் அந்த கதைகளை எல்லாம் எழுதுகிறீர்களா இல்லை வேற யாரவது கோஸ்ட் ரைட்டர் எழுதுகிறாரா என்று, காரணம் நான் எழுதும் போது வேறு மனநிலைக்கு மாறிவிடுவேன். சாருவின் அடையாளமே இந்த எழுத்து தான்…நீங்கள் என்னை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் என்னை படித்திருக்க வேண்டும் இல்லையேல் நான் ஒரு சாதாரண மனிதன் அவ்வளவே” என்றார்… 

ஆசையே துன்பத்திற்கு காரணம், பிற உயிரை வதை படுத்த கூடாது என்ற தம்ம பதம் இந்த நூலில் தற்கால சூழலுக்கு ஏற்றவாறு கொடுத்து இருக்கிறார். இப்படியான ஒரு ஜென் ததுவதங்களையும் புத்த தம்மத்தையும் வழியுறுத்தும் ஒரு தத்துவார்த்த படைப்
  “எனக்கு கார் அனுப்பி, என்னை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டு தன் படத்தைப் பார்க்கச் சொன்னார் மிஷ்கின்” என்று எழுதும் ஜெயமோகனைப் போன்றவர்கள்தான் உங்களுக்கு உற்ற நண்பர்களாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.
சாரு,
தங்கள் விழாவுக்கு ஒரு ரசிகையாக மட்டுமல்ல; உங்களை ரசிக்கவும் வந்திருந்தேன் …  அமைதியாக இருக்கும் என்றுதான் எதிர்பார்த்தேன்…. அடடா,  உண்மையிலேயே ரஜினி படம் ரிலீஸ் போல என்ன ஒரு விசில், கரகோஷம்…  கனிமொழி to ur left and தமிழச்சி தங்கபாண்டியன் on ur right… மிகவும் பொறாமையாக இருந்தது.  பொறுக்க முடியாமல் நிகழ்ச்சி முடியும்போது எழுந்துவிட்டேன் … என் தந்தை, ”என்னம்மா எழுந்துவிட்டாய்?” என்று கேட்க,  ”ஒன்றுமில்லை தலைவலி” என்று கூறினேன். 
  
  -என்ன வரவேற்பு கூட்டம் இந்த கலகக்கார அதிமேதாவி, அப்பாவி ஏழை எழுத்தாளனுக்கு.  
கட் அவுட், பீர் அபிசேகம்...... பாரதி இருந்து உங்களை பார்த்து இருக்கணும்.  
சினிமா என்பது மூன்று மணி நேரப்  பொழுது போக்குக்காகப்  பயன்படுத்தப்படும் ஊடகம், ஆனால் ஒரு நூல் என்பது அறிவை விருத்தி செய்து கொள்ள ஒரு தேடுதல் நோக்கு உள்ளவர்கள் வாசிக்கும் கலை, ஒரு சினிமாவை பார்த்து விட்டு ஒருவன் தான் எதுவும் கற்று கொண்டதாக கூற முடியாது

  -அப்புறம் எதுக்குங்க அய்யா அதிமேதாவி சாரு அவர்களே நீங்க ஒலகப் படங்களையெல்லாம் உழுந்துழுந்து பாக்கறீங்க? 
     
சாரு இருபது வருடங்கள் தீவிரமாக எழுத்தை மட்டுமே தன் வாழ்க்கை முறையாக கொண்டு செயல்படுபவர் என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர் இந்த எழுத்தினால் எதுவும் சம்பாதித்து விடவும் இல்லை நான் அணிந்துள்ள கண்ணாடி விலை 40,000 ன்பதும். விலை 40,000விவிலை 40,000 லை 40,000 விலை 40,000 நான் அணிந்துள்ள கண்ணாடி விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 நான் அணிந்துள்ள கண்ணாடி 

     தினந்தோறும் ஏதோ முனியாண்டி சாமிக்கு சாராயம் படைப்பதைப் போல் அப்ஸொலூட் வோட்காவை லண்டனிலிருந்தும், நியூயார்க்கிலிருந்து எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார்கள் நண்பர்கள்.  ஏன் ஐயா, அப்ஸொலூட் வோட்கா இங்கே சென்னையிலேயே ஒரு போன் செய்தால் வீட்டுக்கு எடுத்து வந்து கொடுக்கிறார்கள்.  அதைப் போய் லண்டனிலிருந்து தூக்கிக் கொண்டு வர வேண்டுமா?  என் எழுத்தைப் படித்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லையா?  நான் அனிஸ் னிஅனிஸ் ஸ் அனிஸ் அனிஸ் அனிஸ் அனிஸ் அனிஸ் அனிஸ் என்ற மதுபானத்தைப் பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறேன்.  ஜீரகத்தில் செய்யப்படும் அற்புதமான பானம்.  ஜப்பானின் தேசிய மதுவான ஸாக்கே பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறேன்.  ஸாக்கேயும் அனிஸும் இந்தியாவில் கிடைப்பதில்லை.  அதை வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கலாம்.  மதுவகைகளில் இன்னும் எத்தனையோ அற்புதங்கள் உள்ளன. உதாரணமாக, Baileys Baileys Baileys Baileys Baileys Baileys Baileys Baileys என்று ஒரு அற்புதம். மதுவகைதான். ஆனால் மிக உயர்தரமான ஐஸ்க்ரீமைப் போல் இருக்கும். ஈடு இணையே இல்லாத ஒரு பானம்.  இளம்பெண்ணை முத்தமிடுவதைப் போன்ற இன்பம் தரக் கூடியது.  இதைக் கொண்டு வந்து கொடுக்கலாம் அல்லவா? 
ஒவ்வொருவரும் காலத்தின் அலைக்கழிப்பைத் தாங்க முடியாமல் தன்னுடைய கொள்கைகளை மூட்டைக் கட்டி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு ஏதாவது செய்து லட்சாதிபதியாகிற முயற்ச்சியில் இறங்கினார்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் வெகுஜன கலாச்சாரத்தின் நாயகனான ரஜினிகாந்தை கடவுள் என்று துதிபாடி, சிறு பத்திரிக்கை இயக்கத்தின் அடையாளங்களில் ஒருவரான குட்டி ரேவதியை கேலிப் பொருளாக்கி பலி கொடுத்து, சினிமாக்கார ர்களின் நம்பிக்கையை பெற்று, சினிமாக்காரர்களுக்கு பல விதமான வேலைகள் செய்து கொடுத்து, இன்று சிலபல பத்து லட்சங்கள் சம்பாதித்தவராக உருவாகிவிட்டார்.அவர் வந்தால் தான் எழுத முடியும் என்றிருந்த தமிழ் நாவல் இன்னும் எழுதப் படாமலே இருக்கிறது.

இவரைப் பார்த்து ஜெயமோகனும் இந்திய ஞானமரபு, அறச்சீற்றம் போன்ற வசனங்களையெல்லாம் இணையதளத்திற்கு மட்டும் என்று வைத்துக் கொண்டு திரைத்துறைக்கு வந்து சேர்ந்தார். அவருடைய கருத்தியல்களோடு உடன்பாடில்லாத திரைத்துறையில் பணியாற்றுகிற போது வேறு தெருவுக்குள் நுழைந்து விட்ட நாய் போல் வாலை இரண்டு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு பம்மி நடக்கிறவாராக தன்னை வைத்துக்கொண்டு வசன தொழில் செய்து லட்சம் லட்சமாய் சம்பாதிக்கிறவறாக மாறிக்கொண்டார்.

மனுஷ்யபுத்திரன், சுஜாதா தான் எழுத்துலகின் பீஷ்மர் என அறிவித்து சுஜாதா அவசர போக்கில் எழுதிய மாத நாவல்களுக்கெல்லாம் சிறு பத்திரிக்கையின் தரமான அச்சு மேன்மையை கொடுத்து ஒரு பதிப்பாளராக உயர்ந்து லட்சங்களைப் பார்க்கத் துவங்கி விட்டார்.

ரவிக்குமார் திருமாவளவனின் கரம் பட்டு எம் எல் ஏ, பிரமுகர் என்ற என்ற அந்தஸ்த்தை அடைந்து விட்டார்.
இப்படி ஏதாவது ஒரு சாமர்த்திய காரியம் செய்து பிழைப்பிற்கும் லட்சத்திற்கும் வழி செய்து கொள்ளாமல் அல்லது செய்யத் தெரியாமல் நின்றவர்கள் இருவர்தான்
ஒருவர் சாருநிவேதிதா. இன்னொருவர் கோணங்கி.
இதில் கோணங்கியின் நிலை பரவாயில்லை. அவர் எந்தப் பணமும் சம்பாதிக்காவிட்டாலும் அவருடைய குடும்ப சூழல் அவரை கை விட்டு விடாது.ஆனால் சாருவின் நிலை அப்படி இல்லை. எந்த மாதமும் வாழ்க்கை அவரை அகௌரவப் படுத்தி விடும் என்கிற சூழல். அதற்கிடையிலும் தான் கொண்ட கொள்கையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து அதே வழியில் இயங்கிக் கொண்டே
அதேபோல் கண்ணாடிக் கடை.  முப்பதாயிரம், நாற்பதாயிரம் விலையுள்ள கண்ணாடிகளை அவள் விருப்பத்துக்கேற்றபடி வாங்கி விட்டு தினமும் திட்டிக் கொண்டிருப்பேன்.  இப்போது நான் அணிந்துள்ள கண்ணாடியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காமல் அவந்திகா என் தலையில் கட்டியது.  விலை 40,000 என்பதால்  

-அய்யா அதி மேதாவி, அப்பாவி சாரு அவர்களே 15 வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் மாடா கஷ்டப்பட்ட உங்களுக்கு எப்படி இப்போ, இவ்ளோ பணம், வசதி வந்துச்சு? பிரபல அரசியல் சார்புடைய இழ்களோட நீங்க தீவிர இலக்கியத்தை வித்துட்டு, சமரசம் செஞ்சுட்டதனாலதானே, இல்லை... பரம்பர சொத்து ஏதாச்சும் வந்துச்சா?      

பணம் தான் இங்கு எல்லா விஷயத்தையும் தீர்மானிக்கிறது.ஒரு தொலைபேசி அழைப்பு உங்களை பதட்டத்திற்கு உள்ளாக்கி உடனடியாக ஆட்டோ பிடித்து ஓட வைக்கிறது. 
உங்களை சில பேர் இன்று அலட்சியமாக பேசி விடுவதெல்லாம் கூட உங்களின் பணமற்ற நிலையினால் தான் ஏற்பட்டு விடுகிறது.

-ரொம்ப ஏழை அதிமேதாவி, அப்பாவி சாரு நீங்க.

  -உங்களோட இந்த அப்பாவி வாசகர் கடிதத்த போட்டுருக்கிங்களே அய்யா அதிமேதாவி, அப்பாவி சாரு அவர்களே, அவரு என்ன அவ்ளோ கேனையனா? உங்க மூக்குக் கண்ணாடி வெலைய அவரு படிக்கலையோ?  

இதோ ஹமீதைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று சொல்லி விட்டு சிட்டி செண்டர் போய் எனக்குப் பிடித்த ஸி.கே. (Calvin Klein) அல்லது Giordano பிராண்டுகளில் சட்டை ட்ரௌசர் எடுத்து வருவேன்.  (உலகின் புகழ் பெற்ற 20 ஃபாஷன் பிராண்டுகளில் இந்த இரண்டும் இடம் வகிப்பவை.  ஆனால் முதல் இடம் வகிக்கும் Louis Vuitton தான் எனக்கு மிகப் பிடித்தது.  ஆனால் அது இன்னும் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பக்கம் வரவில்லை. 

-ஐயோ பவம் பொழைக்கத் தெரியாத மனுஷன் இந்த அதிமேதாவி, அப்பாவி சாரு எவ்ளோ ஏழையா கஷ்டப் படுறாரு?

ஏதாவது ஒன்று செய்து பணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.


  -ஆமாம் அப்பாவி சாரு பணத்தை உருவாக்குங்க.

நாளை கோழிக்கோடில் அய்யப்பனின் நினைவு அஞ்சலிக் கூட்டம்.  ரயிலில் இரண்டாம் வகுப்பு டிக்கட் அனுப்பியிருந்ததால் போகாமல் இருந்து விடலாம் என்று இருந்து விட்டேன்.  இரண்டாம் வகுப்பு எனக்கு ஒத்துக் கொள்ளாது.  ஓல்ட் மாங்கிலிருந்து ரெமி மார்ட்டின் போகலாம்.  ரெமி மார்ட்டினிலிருந்து ஓல்ட் மாங்க் போக முடியாது அல்லவா? 

   --நோட் பண்ணுங்கப்பா தத்துவம், தத்துவம்,  ரெமி மார்ட்டினிலிருந்து ஓல்ட் மாங்க் போகாது. 

இவ்வளவுக்கும் நான் செனகல் நாட்டு உஸ்மான் ஸெம்பீன் படங்களையெல்லாம் பார்த்து ரசிப்பவன். 
ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்தேன்.  பத்து வருடம்.  ஒருநாள் எதுவுமே இல்லாத பிச்சைக்காரனாக தெருவில் துரத்தப்பட்டேன்.

ஒரு இலக்கியப் படைப்பையே அடையாளம் கண்டு கொள்ள முடியாத ஒருவர் எப்படி நல்ல சினிமா எடுக்க முடியும் என்று தோன்றுவதால் நான் நந்தலாலாவுக்கு எழுதிய மதிப்புரையை ரத்து செய்கிறேன் 
  
-இவரு நண்பனா இருந்தா சராசரி படத்த காவியம், கிளாசிக்குன்னு, அள்ளி உடுவாராம், சண்ட போட்டுட்டா விமர்சனத்த ரத்து பண்ணிடுவாரம், காசு குடுத்து புத்தகம் வாங்கி படிக்கிற நாங்கெல்லாம் அப்ப கேணையனுங்களா?       

அதனால்தான் நியூசிலாந்து சென்ற போது மேட்டர் பண்ணினாயா என்று கேட்டேன்.  இது ஒரு மனிதனின் மேல் நான் கொண்ட அதீதமான அன்பினாலும், வாத்சல்யத்தினாலும் கேட்ட கேள்வி.  என் சொந்த மகனாகவே இருந்தாலும் அவன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தால் “செக்ஸுக்கு என்ன செய்கிறாய் மகனே?” என்றுதான் கேட்பேன். 

அதை நட்டநடு சபையில் குழந்தைகளும் கூடியிருந்த சபையில் சொன்னது மன்னிக்க முடியாத குற்றம்.

உங்க கடைசி புத்தகம் என்ன கொலந்தைகளுக்கான புத்தகமா? எதுக்கு கொழந்தைகளை எல்லாம் உள்ள விட்டிங்க?

கமலையும் இளையராஜாவயும் பற்றி எவ்வளவோ விமர்சித்து இருக்கிறேன்.  ஆனால் அதைப் போல் பத்து இருபது மடங்கு என்னிடம் அவர்களைப் பற்றி விமர்சித்தவர் மிஷ்கின்.  இளையராஜாவை இவர் பார்க்கப் போனாராம்.  மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம்.  தண்ணீர் தாகம் தாங்க முடியாமல் இளையராஜா குடித்துக் கொண்டிருந்த தண்ணீர் பாட்டிலைக் கேட்ட போது ”இது என் தண்ணீர்” என்று சொல்லி இளையராஜா பாட்டிலைக் கொடுக்க மறுத்து விட்டாராம்.  இதுபோல் ஒரு ஆயிரம் விஷயங்கள்.  அதையெல்லாம் சொல்லி நான் இளையராஜாவையோ கமலையோ அசிங்கப்படுத்த மாட்டேன்.  

என்னைப் பற்றி மிஷ்கின் பொதுமேடையில் சாரு ஒரு குடிகாரன், ஸ்த்ரீலோலன், அவனுடைய நாவல் ஒரு சரோஜாதேவி புத்தகம் என்று அவதூறு சொன்னதைப் போல்தான் அவர் இளையராஜா பற்றி அவதூறு செய்திருப்பார் என்று இப்போது நான் புரிந்து கொள்கிறேன்.  மிஷ்கினுக்கு ஏதோ உளவியல் பிரச்சினை இருக்க வேண்டும்.  அவர் ஏதாவது ஒரு ஸைக்கியாட்ரிஸ்டை உடனடியாகச் சந்திப்பது அவருடைய எதிர்கால வாழ்வுக்கு நல்லது.

அவருக்கு நட்பு என்றால் என்னவென்று தெரியாது என்று தோன்றுகிறது.  அவர் இளையராஜாவையும், ஓவியர் மருதுவையும் பார்த்தால் அவர்களின் பாதம் தொட்டு வணங்குவார்.  நான் வயதிலும் அனுபவத்திலும் மருதுவுக்கும் சீனியர்.  ஆக, மிஷ்கின் என்னுடைய பாதம் தொட்டு வணங்க வேண்டியவர்.  ஆனால் நமக்குத்தான் இது போன்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகள் எல்லாம் பிடிக்காதே? அதனால்தான் வா மிஷ்கின் என்று சொல்லி அவர் தோளில் கை போட்டு, அவரும் என் தோளில் கை போட அனுமதித்தேன்.  ஆனால் அவரோ அப்படி நான் அனுமதித்ததாலேயே என்னை அவருடைய உதவி இயக்குனர் என்று நினைத்து விட்டார்.  அவரால் ஒருவரின் காலில் விழ முடியும்; அல்லது, அவரை உதவி இயக்குனராக நினக்க முடியும்.  இந்த இரண்டுதான் சாத்தியம்.  இதுதான் ஒரு

சராசரித் தமிழனின் குணம். ஒன்று, காலில் 

விழுவேன்.

  இல்லாவிட்டால், உன்னை என் காலில் 

போட்டு 

மிதிப்பேன்.  சமமாகப் பழகவே தெரியாத 

கலாச்சாரம் இது.


---தமிழ் கலாச்சரத்த கேவலமா பேசின அய்யா அதிமேதாவி, அப்பாவி சாருவ என்ன செய்யலாம்? இவரு போட்டுருக்குற கண்ணாடியிலிருந்து, சரக்கு வரைக்கும் அவருக்கு கொடுத்தது ஆந்திரா கலாச்சாரமா, கேரளா கலாச்சாரமா?


ஆனால் இப்போது அவந்திகாவிடம் சொல்கிறார், உங்கள் கணவரை வரச் சொன்னால் ரெமி மார்ட்டின் கேட்பார்; ’நியூசிலாந்து போயிருந்தேன்’ என்று சொன்னால் மேட்டர் பண்ணினாயா என்று கேட்பார்.  சொல்லுங்கள் சீனிவாசன், இனிமேல் ஜென்மத்துக்கும் அவந்திகாவிடம் நான் நல்ல பெயர் எடுக்க முடியுமா?  ஏனென்றால், மிஷ்கின் இதை தனிப்பட்ட பேச்சில் சொல்லவில்லை.  என் குடும்பமே அமர்ந்திருந்த ஒரு மேடையில் சொல்கிறார்.  அங்கே என் மனைவி மட்டும் அல்ல.  என் மகள்களும் இருந்தனர்.  மிஷ்கின் என்னுடைய 10 வயதே ஆன மகள்களை மெண்டல் ரேப் செய்து விட்டார். புரிகிறாற்போல் சொல்கிறேன்.  விழாவுக்கு என் தம்பியும் வந்திருந்தான்.  சுமார் 15 ஆண்டுகளாக என் வீட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் என்னோடு உறவு வைத்துக் கொள்வதில்லை.  காரணம், நான் ஒரு செக்ஸ் எழுத்தாளன் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதில் என் தம்பி ஒருவன் தான் என்னோடு அவ்வப்போது பேசக் கூடியவன்.  அவனும் அவன் மனைவியும் அவர்களின் பத்து வயது மகளும் விழாவுக்கு வந்திருந்தார்கள்.
விழா முடிந்த மறுநாள் தம்பி எனக்கு போன் செய்தான்.  “அண்ணே, இந்த மிஷ்கின் மாதிரி ஆட்களை ஏன் விழாவுக்குக் கூப்பிடுகிறீர்கள்?”
“அவன் எனக்கு நண்பன் டா…”
“இருக்கட்டும்.  ஆனா நம்ப அபிநயா என்ன கேட்டா தெரியுமா?”
அபிநயா என் தம்பி மகள்.  பத்து வயது.
“என்ன கேட்டா?”
”’மிஷ்கின் நியூசிலாந்து போய்ட்டு வந்தப்போ பெரிய நைனா என்னமோ கேட்டாங்கன்னு சொல்லி அந்த மிஷ்கின் என்னவோ ஒரு மாதிரி சிரிச்சாரே, அது என்ன?  ஏதோ அசிங்கமான விஷயம்தானே?’ன்னு கேக்குறா…”
நண்பர்களே, அவனுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் என்று நீங்கள் சொல்லுங்கள்.
அபிநயா காட்டு நாய்க்கன் ரத்தத்தைக் கொண்டு வந்திருப்பவள்.  எங்களுக்கு அவ்வளவாக சூதுவாது தெரியாது.  வெள்ளந்தியான மக்கள்.  எங்களை யாரும் சுலபத்தில் ஏமாற்றி விடலாம்.  
ஆனால் என்னுடைய இன்னொரு மகள் 
பூஜா பத்து ஆட்களுக்கு சமம்.  கணித 
மேதை ராமானுஜத்தின் பரம்பரை.  
ஸ்ரீவைஷ்ணவ குலம். 
 கேட்க வேண்டுமா? 

---அய்யா அப்பாவி சாரு அவர்களே, இன்னும் நீங்க குலப் பெருமையெல்லாம் இப்டி சொல்லலாமா, அப்டின்னா தாழ்ந்த குத்துல பொறந்தவங்க எல்லாம்        முட்டாள்களா?


 இவளைப் பற்றி ஏற்கனவே பல முறை எழுதியிருக்கிறேன்.  இவளை ஏன் மகள் என்று எழுதினேன் என்றால், ஒருமுறை ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இவளை என் வளர்ப்பு மகள் என்று குறிப்பிட்டு விட்டதால் கோபித்துக் கொண்டு மூன்று நாள் என்னோடு பேசவில்லை.  என் செவுளில் அறைவது போல் அப்போது அவள் என்னைக் கேட்ட கேள்வி, கார்த்திக்கை அப்படிச் சொல்வீர்களா?  இப்படி அவள் கேட்ட போது அவள் வயது மூன்று.  இப்போது பூஜாவின் வயது 10.  ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.  பரத நாட்டியம், கர்னாடக இசை எல்லாம் அத்துப்படி.  ஆங்கிலத்தில் எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால் இவளைக் கேட்பேன்.  சுருக்கமாகச் சொன்னால் ஒரு prodigy.  இவள் என் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர இருந்தாள்.  ஆனால் திங்கள்கிழமை என்பதால் வர முடியவில்லை.  மறுநாள் எனக்கு போன் செய்து விழாவுக்குத் தன்னால் வர முடியாமல் போன துக்கத்தை ஒரு கவிதையாக எழுதி எனக்குப் படித்துக் காண்பித்தாள்.  ஆங்கிலக் கவிதை.  அப்பேர்ப்பட்ட பெண்.  அவள் அந்த விழாவுக்கு வந்திருந்தால் என் கதி என்ன ஆகி இருக்கும்?
”என்னப்பா, அந்த மிஷ்கினும் நீயும் இதைத்தான் பேசிக் கொள்வீர்களா?” என்று கேட்க மாட்டாளா?  மிஷ்கின் பேசியது பத்து வயதுப் பெண் குழந்தையை மெண்டல் ரேப் செய்ததற்கு சமம் அல்லவா?  நீயும் செக்ஸ்தானே எழுதுகிறாய் என்று கேட்கும் அளவுக்கு மிஷ்கின் முட்டாள் அல்ல என்று நினைக்கிறேன்.  மிஷ்கினுக்கும் பத்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.  அவளிடம் சென்று நானும் மிஷ்கினும் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பற்றி நானோ மிஷ்கினோ சொல்ல முடியுமா?  என்னுடைய கதைகள் வயது வந்தவர்களுக்கானவை.  குழந்தைகள் படிக்கக் கூடியவை அல்ல.  பத்து வயதுப் பெண் குழந்தையின் மனதை விஷமாக்கியவனுக்கு – பத்து வயதுப் பெண் குழந்தையை மெண்டல் ரேப் செய்தவனுக்கு நீங்கள் ஆயுள் தண்டனையே அளித்தாலும் அந்தக் குழந்தையின் மனதில் பட்ட காயம் ஆறுமா?  அது அவளுக்கு ஒரு வாழ்நாள் தண்டனைதானே?  பத்து வயது என்பது செக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வயதா?  நானும் மிஷ்கினும் அந்தரங்கமாகப் பேசிக் கொண்டிருந்ததை மிஷ்கின் ஒரு சபையில் – அதுவும் குழந்தைகள் கூடியிருந்த சபையில் – வைத்துச் சொல்லலாமா?
சுரேஷ், உங்களுக்கு விரைவில் பண வசதி விரைவில் ஏற்படும்.  நான் பல காலம் சோற்றுக்கே வழியில்லாமல் வெறும் அழுகல் தக்காளியை உண்டு உயிர் வாழ்ந்திருக்கிறேன்.  இன்னமும் இந்தியாவில் உழைப்புக்குப் பலன் உண்டு என்பதற்கு நான் ஒரு சாட்சி
 மதுவை நிறுத்துவது என்றால் என்ன?  இதோ என் வீட்டில் ஏழு வகை போத்தல்கள் உள்ளன.  ஃபின்லாந்து பிராந்தி கூட உள்ளது.  அவ்வளவு ஏன்?  Baileys-ஏ இருக்கிறது.

 ஆனால் உழைப்பே உயர்வு தரும் என்ற பொய் வாசங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை.  ஒரு ஆள் வாட்ச்மேனாக இருந்தால் வாழ்நாள் பூராவும் வாட்ச்மேனாகவே இருக்க வேண்டியதுதான்.   உழைப்போடு கொஞ்சம் புத்தியையும் கலக்க வேண்டும். அப்போது  பணம் வரும்.  
இதற்கிடையில் என் நாவலில் உள்ள விஷயங்கள் பற்றியும் நானே விளக்க வேண்டுமானால்…  
இந்த நாவல் பற்றித் தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு மட்டுமே தெரியும்.  அடியேன், எஸ்.ரா., மற்றும் நாகார்ச்சுனன். 

கொடிது, கொடிது, தமிழ்நாட்டில் எழுத்தாளனாய் பிறத்தல் கொடிது…

 ஒரு காட்சியில் கமல் 30 நாள் தாடியோடு வருகிறார்.  அதே காட்சியில் அடுத்த நிமிடமே 5 நாள் தாடியோடு வருகிறார்.  இப்படியெல்லாம் அட்டூழியம் செய்தால் நாம் எதையென்று விமர்சிப்பது சொல்லுங்கள்?
படத்தின் கடைசியில் வரும் க்ளைமேக்ஸ் காட்சிகள் எதற்காக வருகின்றன; எல்லோரும் என்ன பேசிக் கொள்கிறார்கள்; திரையில் என்னதான் நடக்கிறது என்றெல்லாம் ஒரு எழவும் புரியவில்லை.  படம் சீக்கிரம் முடியப் போகிறது என்ற நம்பிக்கை ஒளியை மட்டுமே அக்காட்சிகள் தருகின்றன.  மற்றபடி இந்தப் படம் 1946-இல் வெளிவந்த Romance on the High Seas என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.  ஏனென்றால், ரவிக்குமார் கமல் கூட்டணியில் வந்த அத்தனைப் படங்களும் ஹாலிவுட் படங்களிலிருந்து சுட்டதுதான்.  அவ்வை சண்முகி – Tootsie & Mrs. Doubtfire; தெனாலி – What about Bob?;  பஞ்ச தந்திரம்  – Very Bad Things;  தசாவதாரம்  – Outbreak.

இந்தப் படத்தில் கமல் எழுதியிருக்கும் பாடல் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அந்தப் பாடலின் சில வரிகள் இவை:
இதே கேள்வியை கமல் மற்ற மதத்தின் கடவுள்களை நோக்கிக் கேட்பாரா?  கடவுளை இழிவு படுத்தினால் கடவுளுக்கு ஒன்றும் நட்டமில்லை; ஆனால் அந்தக் கடவுளை வணங்கும் கோடானுகோடி மக்களை இழிவு செய்ததாகாதா? 
கமலோ மனிதர்களையும் மனித நம்பிக்கைகளையும் இழிவு படுத்துகிறார்.  மிகவும் கண்டிக்கத்தக்க செயல் இது.
இது குடி பற்றி…  இனி வருவது குட்டி… 
இல்லை தீபிகா.  மிஷ்கின் சரோஜாதேவி புத்தகத்தைப் படித்திருப்பார்.  சரோஜாதேவி புத்தகத்தைப் படிக்காத ஒரு தமிழனைக் கூட நான் 
பார்த்ததில்லை.
”நான் லேண்ட் மார்க்கில் உள்ள புத்தகங்களில் பாதியை அள்ளிக் கொண்டு வந்து விட்டேன்.  இன்னும் 10 ஆண்டுகளுக்குப் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னிடம் உள்ளன”
தி. நகரில் உள்ள டென்.டௌனிங் ‘பப்’பில் எங்கே திரும்பினாலும் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும்; யாராவது பார்த்திருக்கிறீர்களா?  உலகிலேயே புத்தகங்கள் ஸ்டேஜ் ப்ராப்பர்ட்டியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒரே மதுபானக் கூடம் அதுவாகத்தான் இருக்கும் என்று இதுவரை நினைத்திருந்தேன்.  இப்போது மிஷ்கினின் அலுவலகமும் அப்படித்தான் என்று தெரிகிறது.
(ஆட்டம் இப்போதுதான் ஆரம்பம்)
என்னுடைய பிரச்சினையே, என் மீது அன்பு பாராட்டுபவர்கள்தான். சூரியபிரகாஷைக் கேட்கிறேன்.  என் ஆறு வயதுக் குழந்தையை ஒருவன் வன்புணர்ச்சி செய்கிறான் என்றால் அவனுக்கும் நான் நன்னயம்தான் செய்ய வேண்டுமா?

ஸீரோ டிகிரி வெளியீட்டு விழா தேவநேயப் பாவாணர் நூலகத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.  மொத்தம் 20 பேர் வந்திருந்தார்கள்.  அது ஒரு சிறிய அறை.  இன்னும் ஐந்து பேர் வந்திருந்தால் அறையில் இடம் இருக்காது.  அப்படித்தான் இங்கே – தமிழ்நாடு என்று அறியப்படும் தேசத்தில் – புத்தக வெளியீட்டு விழாக்கள் நடந்து கொண்டிருந்தன.  இதை இந்தப் பத்து ஆண்டுகளில் காமராஜர் அரங்கத்துக்கு மாற்றியது யார்?  20 பேர் 1000 பேராக மாறியது எப்படி? நானும், எஸ்.ரா.வும், மனுஷ்ய புத்திரனின் உயிர்மையும்தான் காரணம்.  இதற்காக நாங்கள் எங்கள் வாழ்க்கையையே
இதோ ஹமீதைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன்’ என்று சொல்லி விட்டு சிட்டி செண்டர் போய் எனக்குப் பிடித்த ஸி.கே. (Calvin Klein) அல்லது Giordano பிராண்டுகளில் சட்டை ட்ரௌசர் எடுத்து வருவேன்.  (உலகின் புகழ் பெற்ற 20 ஃபாஷன் பிராண்டுகளில் இந்த இரண்டும் இடம் வகிப்பவை.  ஆனால் முதல் இடம் வகிக்கும் Louis Vuitton தான் எனக்கு மிகப் பிடித்தது.  ஆனால் அது இன்னும் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பக்கம் வரவில்லை

 தியாகம்செய்தோம் 

--கைதட்டுங்கப்பா இப்ப இருக்கிற இலக்கிய சூழ்நிலைய இவங்க மூணு பேரும்தான் தியாகம், ரத்தம், வேர்வை சிந்தி வளர்த்தாங்களாம் ,  அப் மத்தவங்கெல்லாம்?

-15 வருசத்துக்கு முன்னாடி மாடா கஷ்ட்டப் பட்டவரு இப்ப போடற கண்ணாடி, டிரஸ், சரக்கு  எல்லாம் பார்த்தா  இலக்கியம்தான் தியாகம், ரத்தம் எல்லாம் சிந்தி உங்களை வளத்தமதிரி இருக்கு. இல்ல இதுக்கெல்லாம் ஆசப் பட்டு இலக்கியத்த நீங்க வித்துட்ட மாதிரி இருக்கு.
விலை 40,000 ன்பதும். விலை 40,000விவிலை 40,000 லை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000 விலை 40,000  

.  எங்கள் குருதியையும் வியர்வையையும் சிந்தினோம்.
பெங்களூரிலிருந்து சரவண கார்த்திகேயன், ராஜேஷ், கொச்சியிலிருந்து தயாநிதி. அறந்தாங்கியிலிருந்து ஒரு நண்பர்.  இப்படிப் பல ஊர்களிலிருந்து  பல வாசகர்கள், நண்பர்கள்.  இவர்களுக்கெல்லாம் நான் அந்தக் கூட்டத்தில் நியாயம் செய்யவில்லை.  சரவண கார்த்திகேயன் என்று நினைக்கிறேன்; நாவலில் ஒரு கையெழுத்து கேட்டார்.  புத்தக விழாவில் பார்த்துக் கொள்ளலாமே என்று தயவுடன் மறுக்க வேண்டியாகி விட்டது.  ஏனென்றால், கையெழுத்துப் போட அமர்ந்தால் அதற்கே ஒரு மணி நேரம் ஆகி விடும்.  ஏனென்றால், நான் மற்ற பிரபலங்களைப் போல் என் கையெழுத்தை மட்டும் இட மாட்டேன்.  நண்பரின் பெயர் கேட்டு   முகமன் கூறித்தான் கையெழுத்துப் போடுவேன்.  லும் நேரம் வேறு இரவு பத்தரைக்கு மேல் ஆகி விட்டது.  அன்றைய தினமும் காலை மூன்று மணிக்கே முழிப்பு வந்து தொலைத்து விட்டதால் தூக்கக் கலக்கம் வேறு.  மேலும், இரவு விருந்துக்கு வேறு நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.  இத்தனை காரணங்களால்தான் கையெழுத்துப் போட முடியவில்

-வெளியூரிலிருந்தெல்லாம் வந்தவங்களுக்கு ஒரு கையெழுத்துப் போடஒரு மணி நேரம் இல்லையாம், சரக்கடிக்க நேரமாகிடுச்சுன்னு போய்ட்டாகலாம் .

இப்போது மிஷ்கின்.  நீங்களும் மற்ற நண்பர்களும் அவருடைய அராஜகத்தைப் பொறுத்துக் கொண்டிருந்தது பற்றி நான் மிகவும் வருத்தமடைகிறேன்.  என்னுடைய ஆறு வயதுக் குழந்தையை ஒருவன் வன்புணர்ச்சி செய்தால் நீங்கள் பொறுத்துக் கொண்டிருப்பீரகளா என்பதே என் கேள்வி.

--கண்டிப்பா பொறுத்துக்க முடியாது அய்யா சாரு அவர்களே. 

நீங்க தார்மீகமா பார்த்தா எந்த படத்துக்கும் இனிமே விமர்சனமே எழுதக் கூடாது, உங்க வாசகர்கள்கிட்ட பகிரங்கமா  மன்னிப்புக் கேட்கணும்.   


-சீரியசான,நவீன இலக்கியம் புரியாத என்ன மாதிரியான வாசகர்களுக்கு சாரு செய்த தரங்கெட்ட விமர்சனம் பத்தியும், அடிச்ச அந்தர் பல்ட்டி பற்றியும் கட்டுரை வடிவில் அடுத்த பதிவில்.



4 comments:

Raju said...

konjam konjamthan purinchuthu. Ithu oru vithiyasamana eluthu nadaiya illai basic matter ennannu theriyathathunilay intha pirachnaiya. But u try to make some kind of different expression and writing. Keep it up.

mathi said...

padippatharkku migavum siramamaka irukkirathu.
ore maathiriyana eluthuruvukku matrungal.
nanri

mathi

கோநா said...

raju, mathi,thankalin karuththukalukku mikavum nanri.
ithil ulla visayankal valakkamana katturai vadivil aduththa pathivil yeluthukiren.

Raja said...

என்னமோ போ கோநா...கலக்கறே....