Monday, December 13, 2010

மூன்று லட்சத்தொன்று


ஐஸ் நம்பர் 
ஆட்டத்தின் நடுவே 
ஒளிந்திருந்த ஓவியா 
எழுந்து வந்து சொன்னாள்
"அங்கிள்  இவன் கெட்ட வார்த்தை சொல்றான் "    
ஆதிரனை அழைத்து அதட்ட
சிரித்துக்கொண்டே  சொன்னான்...
எச்சிலால் கழுவி 
சுத்தப் படுத்திவிட்ட பிள்ளையை 
கண்டிக்கத் தேவையில்லாமல் போனது
மூன்று லட்சத்து ஒன்றாகிவிட்ட சந்தோசத்துடன்
நின்ற இடத்திலிருந்தே துவங்கியது ஆட்டம்.   

No comments: