Monday, December 13, 2010

சில பதில்களுக்கான சில கேள்விகள்

பள்ளியிறுதியில் ஒருத்தி
எத்து பல்லு  சிரிப்பு    நல்லால்ல    என்றாள்
முறைப்பெண் ஒருத்தி
மூக்கு  சப்பை   என்றாள் 
கல்லுரி முதலாண்டில்   ஒருத்தி
கலர்  கொஞ்சம்  கம்மி   என்றாள்
இறுதியாண்டில்   ஒருத்தி 
வசதி  பத்தாது  என்றாள் 
உடன் வேலை செய்யும்  ஒருத்தி    
ஒன்றரை  இன்ச்  உயரங்கம்மி   என்றாள் 
பெண் பார்க்கச் சென்றயிடத்தில்  ஒருத்தி 
தனியே  அழைத்து
தலையில்   முடியே   இல்லை ,  சொட்டை   தெரியுது    என்றாள்.

எனில்
காதல் என்பது
வெறும் பல்லிளிப்பா,
நீ...ள ... மூக்கா,
தோல் வெளுப்பா
காசு பணமா,
ஒன்றரை இன்ச் அதிக உயரமா,
.
.
.
என்ன எம் மசிறா...