பள்ளியிறுதியில் ஒருத்தி
எத்து பல்லு சிரிப்பு நல்லால்ல என்றாள்
முறைப்பெண் ஒருத்தி
மூக்கு சப்பை என்றாள்
கல்லுரி முதலாண்டில் ஒருத்தி
கலர் கொஞ்சம் கம்மி என்றாள்
இறுதியாண்டில் ஒருத்தி
வசதி பத்தாது என்றாள்
உடன் வேலை செய்யும் ஒருத்தி
ஒன்றரை இன்ச் உயரங்கம்மி என்றாள்
பெண் பார்க்கச் சென்றயிடத்தில் ஒருத்தி
தனியே அழைத்து
தலையில் முடியே இல்லை , சொட்டை தெரியுது என்றாள்.
எனில்
காதல் என்பது
வெறும் பல்லிளிப்பா,
நீ...ள ... மூக்கா,
தோல் வெளுப்பா,
காசு பணமா,
ஒன்றரை இன்ச் அதிக உயரமா,
அ
ட
.
.
.
என்ன எம் மசிறா...
2 comments:
nice
nanri arasan.
Post a Comment