வேலைக்குச் செல்லும் வேளையில்
மின்சார ரயில்நிலையத்தின் வெளியே
"ரெண்டு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி..."
கூவிக் கொண்டிருந்தாள்
ஒரு சிறுமி.
வேலை முடிந்த மாலையில்
அதே இடத்தில் அச்சிறுமி
"நாலு மொழம் அஞ்சு ரூபா
மல்லி, மல்லி..."
கூவிக் கொண்டிருந்தாள்.
அது
அரைநாளில்
இருமடங்காகும்
மந்திர மல்லி
அச்சிறுமி
ஒரு தேவதையாக
அந்நிலமை
ஏதேனும் சாபமாகவும்
இருக்கக் கூடுமென்றேன்
ஒருவரும் நம்பவில்லை
சிரித்துச் செல்கிறார்கள்.
3 comments:
excellent...
poignant, poetic
படைத்தவன் பண்பில்லாதவன்.
Post a Comment