Monday, March 28, 2011

மலர்கள் மலரும்

ஒருவழிச் சாலையாகிவிட்ட
இருவழிச் சாலையொன்றில்
இருவரும் கடந்து செல்கிறோம்
எதிரெதிரே.

இன்னுமிருக்கும்
கண்ணுக்குப் புலப்படாத
பழைய தடுப்புச் சுவரில்
மலர்ந்திருக்கிறது
மழுங்கிய முட்களுக்கிடையில்
புதிய பூக்கள்.

ஒரு துரோகம்
ஒரு உதவி
ஒரு வாதை
ஒரு காதல்
ஒரு ஏமாற்றம்
ஒரு நம்பிக்கை
ஒரு குற்றவுணர்ச்சி
ஒரு தியாகம்
ஒரு கோபம்
ஒரு கண்ணீர்
அனைத்தின் எடையும்
கணந்தோறும் மாறுகின்ற
காலத்தின் நிரந்தர தனுசில்
நிலையற்ற முள்ளென
அதிர்கிறதுறவுகள்.

உன்னோடு போரிட்டு
என்குருதி சிதறிய மண்ணில்
புண் ஆறிப் பூத்திருக்கும்
உறுத்திய முட்களைக் கடந்த
புத்தம் புது மலர்கள்
உன் மண்ணிலும் மலரும்
காத்திருப்போம்... 

3 comments:

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..

துரோணா said...

அருமையான கவிதை.வாழ்த்துக்கள் :)

சிவகுமாரன் said...

அதிர்கிறதுறவுகள்
அதிர்கிற துறவுகள்
அதிர்கிறது உறவுகள் .
அருமையான வார்த்தை விளையாட்டு
அருமை அருமை
பலே பலே கோநா