Tuesday, February 8, 2011

ஒரு கறுப்புப் பூனையும் ஆறு கோப்பை மதுவும்

ஒரு பூனையின் எலும்புகள்
அவ்வளவு இலகுவானது
நீதிமன்றங்களின் சட்டங்கள் போல
நவீன இலக்கியம் போல
உயிர்மெய்யின் "லு" போல
பல கோணங்களில் வளையக்கூடியது

ஒரு பூனையின் உடல்
அவ்வளவு மென்மையானது
பிறந்த குழந்தையின் பிருஷ்டம் போல
வளர்ந்த பெண்ணின் மார்பைப் போல
காதலியின் கன்னங்களைப் போல
தொட்டுப் பார்க்கத் தூண்டுவது.

ஒரு பூனையின் கண்கள்
அவ்வளவு உயிர்ப்பானது
பேரழகு கொண்ட கள்ளக் காதலி போல
அசையும் பாதரசத்தைப் போல
சிமிட்டும் நட்சத்திரத்தைப் போல
இரவிலும் ஒளிரக் கூடியது

ஒரு பூனையின் உதடுகள்
அவ்வளவு சிவப்பானது
பருவமடையாத சிறு பெண்ணின் யோனி போல
பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் போல
கொலை செய்யப்பட்டவனின் ரத்தத்தைப் போல
ரகசியமாய் முத்தமிடத் தூண்டுவது.

ஒரு பூனையின் குரல்
அவ்வளவு இனிமையானது
பெண்குழந்தையின் சிரிப்பு போல
ஆண் குழந்தையின் அழுகை போல
மனைவியின் சிணுங்கல் போல
அம்மாவின் ஆசிர்வாதம் போல
நேரடியாய் இதயம் நுழைவது.

ஒரு பூனையின் இருப்பு
அவ்வளவு நியாயமானது
பறவையின் சிறகு போல
கடவுளின் பல கரங்கள் போல
பூக்களின் தேன் போல
தவிர்க்க இயலாதது.

கடவுளும் உறங்கிவிட்ட இந்த சபிக்கப் பட்ட இரவில்
என் காரின் குறுக்கே பாய்ந்த கறுப்புப் பூனையின் உயிரும்
அவ்வளவு அபூர்வமானது
கடந்துவிட்ட அந்த நொடியைப் போல
அழகிய முதியவளின் இளமையைப் போல
கருக்கலைப்பு செய்யப்பட்ட குழந்தையைப் போல
கதறி அழுதாலும் திரும்ப வராதது.

இந்தப் பொன்னிற மது
அவ்வளவு ஆச்சர்யமானது
மந்திரவாதியின் மந்திரக்கோல் போல
நல்ல புணர்ச்சியொன்றின்  உச்சத்தைப் போல
கடுந் தவத்துக்குப்பின் அடைந்த உன்மத்தம் போல
தற்கொலை செய்து கொண்டவனின் இறுதி நொடி போல
நூறு பூனைக் குட்டிகளின் மூச்சுப் போல
சூடானது இதமானது மயங்கவைப்பது
நம்மை நாமே மன்னிக்குமளவு கருணையேற்றுவது
எல்லாம் வல்ல கடவுளாக்குவது

ஆறாவது கோப்பையின் இறுதியில்
தானாக தரையில் விழுந்து
நானாக சிதறுகிறேன் நூறு பூனைகளாக
குறுக்கே பாய்ந்த கறுப்புப் பூனையென
உருமாறிய என்குறி 
"i am back" என ஆங்கிலத்தில் கத்தியபடியே
அடுத்த அறைக்குள் நுழைகிறது 
அது பிள்ளைகள் உறங்கியபின்
பின்னிரவுக் காமத்துக்காக காத்திருக்கும்
என் மனைவியின் படுக்கை அறை.

19 comments:

ஹேமா said...

ஒவ்வொரு வரியாக ரசித்து வாசித்தேன் கோநா.பூனையை இந்தளவுக்கு அணு அணுவாக ரசிக்கமுடியுமா.அல்லது ஆறாவது கோப்பைதான் ரசிக்க வைத்ததா !

அச்சோ...அதுவும் ஆங்கிலம் கதைக்கும் கறுப்புப் பூனை !

adhiran said...

killing a mock cat ! dont mix alcohal with drive boss.. good one. thanks.

Unknown said...

பூனைக் குறியீடு அபாரம்..

Philosophy Prabhakaran said...

அய்யய்யோ காமத்துப்பாலா தெரியாம படிச்சிட்டேன்...

சமுத்ரா said...

nice!:)

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

கவிதை மிக அருமை.

சிவகுமாரன் said...

எத்தனை "போல".
ஏகப்பட்ட உவமைகள்
அடிபட்ட பூனையின் குரல்
இன்னும் ஓலித்துக் கொண்டே இருக்கிறது.
அருமையான கவிதை.
ஆனாலும் முத்தமிடத் தூண்டும் லிஸ்டில் முகம் சுளிக்க வைக்கும் ஒன்று.

கோநா said...

நன்றி ஹேமா.

கோநா said...

முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி ஆதிரன்.

கோநா said...

கே.ஆர்.பி.செந்தில், ...முதல் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

கோநா said...

@பிரபா,

@சமுத்ரா,

@கனாக்காதலன்,

@சிவகுமாரன்,

தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Thanglish Payan said...

I really enjoyed reading your poem..
its amazing really.

PS: sorry i don't have tamil fonts

கோநா said...

welcome thanglish. thank u.

goma said...

கொஞ்சம் காம ரசம்,கொஞ்சம் வி-ரசம்...
மதில் மேல் பூனை போல......

vinthaimanithan said...

வாவ்! சமீபகாலங்களில் நான் ரசித்த அருமையான கவிதை.

உவமைகளிலும் உருவகங்களிலும் பின்றீங்க கோநா!

"உயிர்மெய்யின் "லு" போல"

"பிறந்த குழந்தையின் பிருஷ்டம் போல"

"வளர்ந்த பெண்ணின் மார்பைப் போல"

"பேரழகு கொண்ட கள்ளக் காதலி போல"

"பருவமடையாத சிறு பெண்ணின் யோனி போல"

you mean it exactly...

கோநா said...

nanri goma.

கோநா said...

தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி vinthaimanithan.

மதி said...

//உயிர்மெய்யின் "லு" போல

அசையும் பாதரசத்தைப் போல

நூறு பூனைக் குட்டிகளின் மூச்சுப் போல//

நல்ல உவமைகளும் வித்தியாசமான பாடுபொருளும் ! நல்ல கவிதை வாசித்து நாளாச்சு .. இன்று என் குறை உங்கள் கவிதையால் தீர்ந்தது .. வாழ்த்துகள்

கோநா said...

nanri mathi.