Wednesday, February 2, 2011

பதங்கமாதல்


சாத்தானால் ஆசீர்வதிக்கப் பட்ட இந்த
சாமத்தின் நடுவினில்
சுழலும் மின்விசிறியின் சிறகுகளிலிருந்து
அறைமுழுதும் இறங்கிப் பரவுகிறது
இறந்த காலத்தின் வெம்மை

இரவு விளக்கொளியில்
சுவற்றில் நெளியுமென் நிழல்
இருண்டு கிடக்கிறது
ஒளியைப் பற்றிய நம்பிக்கைகள் பொய்த்து

அடைக்கப் பட்ட ஜன்னலுக்கு வெளியே
பாடிச் செல்லும் பைத்தியத்தின் குரல்
ஏனோ போதை ஏற்றுவதாகவும்
கிளர்ச்சி யூட்டுவதாகவும் இருக்கிறது

ஆழ்ந்து தூங்கும் அதிகாலையில்
உங்கள் ஜன்னலுக்கு வெளியே பாடும் குரல்
இன்று ஒரு பறவையுடையதாகவும்
நாளை என்னுடையதாகவும்
பிறிதொருநாள் உங்களுடையதாகவும் இருக்கலாம்.

-நன்றி உயிரோசை வார இணைய இதழ்.

32 comments:

Yaathoramani.blogspot.com said...

நான்கே பத்திகளில்
இருளில் இருந்து ஒளிக்கும்
அவ நம்பிக்கையில் இருந்து நம்பிக்கைகும்
உணர்வினை இழுத்துச் செல்லும்
உன்னத கவிதை.. வாழ்த்துக்கள்

கோநா said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி ரமணி

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

மிகவும் அருமையான தேர்ந்தெடுத்த வரிகள்.

கோநா said...

தொடர் வருகைக்கு மிக்க நன்றி kanakkathalan.

ராமலக்ஷ்மி said...

கவிதை நன்று கோநா.

கோநா said...

vaanka raamalakshmi, mikka nanri.

மதுரை சரவணன் said...

//ஆழ்ந்து தூங்கும் அதிகாலையில்
உங்கள் ஜன்னலுக்கு வெளியே பாடும் குரல்
இன்று ஒரு பறவையுடையதாகவும்
நாளை என்னுடையதாகவும்
பிறிதொருநாள் உங்களுடையதாகவும் இருக்கலாம்.//


அருமை... கவிதை வாழ்த்துக்கள்

கோநா said...

maru varukaikkum, valththukkum mikka nanrikal saravanan.

விஜய் said...

பதங்கமாதல் தங்கள் கவிதைகளில் ஒரு கிரீட பதக்கம்

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

கோநா said...

@vijay
nanri nanba.

Philosophy Prabhakaran said...

// பதங்கமாதல் தங்கள் கவிதைகளில் ஒரு கிரீட பதக்கம் //

அவர் சொன்னா சரியாதான் இருக்கும்...

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு கோநா!

அடர்த்தியும் செரிவுமான பயணம். வாழ்த்துகள் மக்கா!

கோநா said...

தொடர் வருகைக்கும், வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி பிரபா

கோநா said...

வாங்க பா.ரா. அப்பாடா...உங்க ஆசீர்வாதத்த வாங்கியாச்சு, இப்பத்தான் நிம்மதியா இருக்கு.

shammi's blog said...

sila varigalil en sithanaiyoo enra aiyam vanthu vidukirathu....arumai yana kavidai ....

சிவகுமாரன் said...

\\பாடிச் செல்லும் பைத்தியத்தின் குரல்
ஏனோ போதை ஏற்றுவதாகவும்
கிளர்ச்சி யூட்டுவதாகவும் இருக்கிறது//

அடடா
என் போதைப்பொருட்கள் லிஸ்டில் விட்டுப் போச்சே

கவிதை அருமை கோநா

rvelkannan said...

கவிதைக்குள் சில நிமிடங்கள் பயணித்தேன் என்று சொல்லவதை விட
பதங்கமானேன் என்று சொல்லாம் கோநா.
அடர்வு நிறைந்த கவிதை வாழ்த்துகள்

கோநா said...

நன்றி shammy

கோநா said...

thank u samudra

கோநா said...

கருத்துக்கு மிக்க நன்றி சிவகுமார்

கோநா said...

தொடர் வாசிப்புக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றிகள் வேல் கண்ணன்

அன்புடன் நான் said...

ஆழ்ந்து தூங்கும் அதிகாலையில்
உங்கள் ஜன்னலுக்கு வெளியே பாடும் குரல்
இன்று ஒரு பறவையுடையதாகவும்
நாளை என்னுடையதாகவும்
பிறிதொருநாள் உங்களுடையதாகவும் இருக்கலாம்.//

மிக ரசித்தேன் .... பாராட்டுக்கள்.

கோநா said...

mikka nanri karunakarasu.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

ரசித்து படித்தேன் ...வாழ்த்துக்கள் சகோ...

கோநா said...

முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழி பிரஷா.

ஹேமா said...

வாழ்த்துகள் கோநா.திங்களன்றே உயிரோசையில் வாசித்துவிட்டேன்.அருமையாய் இருக்கிறது இறந்தகாலத்தின் ஒலி !

கோநா said...

nanrikal hema.

goma said...

வாழ்த்துக்கள்.
மேன்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.

கோநா said...

mikka nanri goma.

சிவகுமாரன் said...

நம்ம பக்கம் வாங்க கோனா சார்

"உழவன்" "Uzhavan" said...

அழகான கவிதை.. வாழ்த்துகள்

கோநா said...

thodar varukaikku nanrikal uzhavan.