தட்டைத் தட்டியெழுப்பிய
தாயின் தாளத்துக்கு
இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி
கழுத்தை நெரித்துத் தொங்கிய
கம்பி வளையத்தை
தோள்களைக் ஒடுக்கி,
நெஞ்சைக் குறுக்கி,
வயிற்றைச் சுருக்கி,
கால்வழியேயெடுத்து
கக்கத்தில் வைத்துக்கொண்டு
சில்லறைத் தட்டை
தாயிடம் கொடுத்துவிட்டு
தவழும் தம்பியுடன்
சிரித்து விளையாடுகிறாள்
வித்தை காட்டிய சிறுமி.
கழுத்தை நெரித்து விடவேண்டுமென
கங்கணங் கட்டி வந்த வறுமையும்,
உதவி விட்டதாய்ச் சத்தமிடும்
சில்லறைகளின் மனிதாபிமானமும்
மாட்டிக்கொண்டு முழிக்கின்றன செய்வதறியாமல்,
கக்கத்தில் வைத்திருந்த கம்பி வளையமாய்.
-நன்றி திண்ணை இணைய இதழ்.
-நன்றி பதிவுகள் மாத இணைய இதழ்
9 comments:
வலிகள் நிறைந்த வாழ்க்கை .... அற்புதமாக சொல்லி இருக்கிர்கள்...
thank u arasan for ur continous reading and encouragement.
Arumaiyana kavidhai anal valikal mikundadu.
thank u smilizz for ur visit and comment.
விழியில் நீர் கசிய வைத்து விட்டீர்.
\\உதவி விட்டதாய்ச் சத்தமிடும்
சில்லறைகளின் மனிதாபிமானமும்//
மனதில் அறைந்த வரிகள்.
அருமை கோநா
Lines are touching...!
வறுமை...அதுவும் பிச்சையெடுப்பது கொடுமை கோநா !
அந்த கலைஞர்களை பற்றிய சொல்வடிவம் மிக வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.
Post a Comment